மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்

நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தங்கள் பகுதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது தொடர்பு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பார்வையாற்றோருக்கான விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகைவிண்ணப்பம் (85KB, PDF)
பார்வையற்றவர்களுக்கான நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்விண்ணப்பம் (51KB, PDF)
பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கிவிண்ணப்பம் (51KB, PDF)
பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி கைகடிகாரம்விண்ணப்பம் (51KB, PDF)

வங்கி கடன் உதவி விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்விண்ணப்பம் (36KB, PDF)
தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவிவிண்ணப்பம் (43KB, PDF)
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)விண்ணப்பம் (Online)
படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)விண்ணப்பம் (Online)

கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (1 முதல் 8ம் வகுப்பு வரை) விண்ணப்பம் (46KB, PDF)
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்) விண்ணப்பம் (46KB, PDF)
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்கள்) விண்ணப்பம் (46KB, PDF)
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்) விண்ணப்பம் (Online)

பயணச்சலுகை விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை விண்ணப்பம் (85KB, PDF)
அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகைதேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்
அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகைவிண்ணப்பம் (68KB, PDF)

திருமண நிதியுதவி விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிவிண்ணப்பம் (61KB, PDF)
பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிவிண்ணப்பம் (61KB, PDF)

உதவித்தொகை விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகைவிண்ணப்பம் (45KB, PDF)
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகைவிண்ணப்பம் (45KB, PDF)
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகைவிண்ணப்பம் (46KB, PDF)
வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை விண்ணப்பம் (88KB, PDF)

உதவி உபகரணங்களுக்கான விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்விண்ணப்பம் (51KB, PDF)
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் விண்ணப்பம் (48KB, PDF)
மூன்று சக்கர சைக்கிள்விண்ணப்பம் (51KB, PDF)
சக்கர நாற்காலிவிண்ணப்பம் (51KB, PDF)
காதொலி கருவிவிண்ணப்பம் (51KB, PDF)
காதுக்கு பின் அணியும் காதொலி கருவிவிண்ணப்பம் (51KB, PDF)
நவீன செயற்கை அவயம்விண்ணப்பம் (51KB, PDF)
செயற்கை அவயம்விண்ணப்பம் (51KB, PDF)
முடநீக்கு சாதனம்விண்ணப்பம் (51KB, PDF)
ஊன்றுகோல்விண்ணப்பம் (51KB, PDF)
சக்கர நாற்காலிவிண்ணப்பம் (51KB, PDF)

காப்பீடு அட்டை விண்ணப்பம்

திட்டங்கள்விண்ணப்பம்
மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகுடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டை விண்ணப்பங்கள்

திட்டங்கள்விண்ணப்பம்
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைவிண்ணப்பம் (51KB, PDF)
மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)விண்ணப்பம் (Online)

தமிழக அரசு

மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர். வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்

வழங்கப்படும் உதவி:
மாதம் ரூ.1500/-


தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/-


தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/-


சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்

தகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: ரூ.50000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.10000 மானியம் வழங்கப்படும்


தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி

தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்

வழங்கப்படும் உதவி: தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன், அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும்.


பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.


படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

தகுதி: 1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.

தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.


மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: 1 முதல் 8ம் வகுப்பு வரை

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு

வழங்கப்படும் உதவி: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000


மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.

வழங்கப்படும் உதவி: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4000


மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்:
விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.

வழங்கப்படும் உதவி:
பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.6000/-
முதுகலை பட்டப்படிப்பு ரூ.7000/-


மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

தகுதி: முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு

வழங்கப்படும் உதவி:
கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது
9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
11ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும்.


மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

திட்டம்: வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை

தகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு

வழங்கப்படும் உதவி: 45 வயதிற்குள் விண்ணப்பிபபவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600/-
12ம் வகுப்பு- ரூ.750/-
பட்டப்படிப்பு ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

தொடர்பு அலுவலர்: உதவி இயக்குனர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அவர்களிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கவும்.


மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை

தகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று

வழங்கப்படும் உதவி:
வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை

தகுதி: பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 3.

வழங்கப்படும் உதவி:
மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து சலுகை.


அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை

தகுதி: தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்

வழங்கப்படும் உதவி: தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ்


அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை

தகுதி: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி:
துணையாளருடன் தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ்


மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று

வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்


பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்;
தம்பதியரில் ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
முதல்திருமணமாக இருத்தல் வேணடும்.
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல். ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி சான்று.

வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திலம் ரூபாய் 25000 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்.


இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

தகுதி: 1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.


மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள்;
18 வயதுக்கு மேல் 45 வயது வரை.
தையல் பயிற்சி முடித்தவர்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று.

வழங்கப்படும் உதவி: விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்.


மூன்று சக்கர சைக்கிள்

தகுதி: இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்

வழங்கப்படும் உதவி: விலையில்லா மூன்று சக்கர சைக்கிள்


சக்கர நாற்காலி

தகுதி: இரண்டு கால்களும் கைகளும் செயல் இழந்தவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்

வழங்கப்படும் உதவி: விலையில்லா சக்கர நாற்காலி


காதொலி கருவி

தகுதி: செவித்திறன் குறையுடையவர்கள 3 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், காது பரிசோதனை சான்று (Audiogram) புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா காதொலி கருவி


காதுக்கு பின் அணியும் காதொலி கருவி

தகுதி: 6ம் வகுப்புக்கு மேல் கல்வி பயில்பவர்கள் மற்றும் பணிபுரிவர்கள் 11 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் காது பரிசோதனை சான்று (Audiogram) புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி


பார்வையற்றவர்களுக்கான நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்

தகுதி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 12 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்


பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி கைகடிகாரம்

தகுதி: பணிபுரிபவராகவோ அல்லது பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பணிச்சான்று அல்லது கல்விச் சான்று புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா பிரெய்லி கைகடிகாரம்


பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கி

தகுதி: பார்வை குறையுடைய மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று, புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கி


நவீன செயற்கை அவயம்

தகுதி: விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள் பணிபுரிபவராகவோ அல்லது படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று.

வழங்கப்படும் உதவி:
விலையில்லா நவீன செயற்கை அவயம்.


செயற்கை அவயம்

தகுதி: விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா செயற்கை அவயம்.


முடநீக்கு சாதனம்

தகுதி: இளம்பிள்ளை வாதம் அல்லது மூளைமுடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்:
விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா முடநீக்கு சாதனம்


ஊன்றுகோல்

தகுதி: கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: விலையில்லா ஊன்றுகோல்


மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை

தகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்

வழங்கப்படும் உதவி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை

தொடர்பு அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.


மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி

தகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை உள்ள காதுகேளாதவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்:
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி


மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை
(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)

தகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள்

தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல் ரேகை

வழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்


மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)

தகுதி: 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
(பார்வையற்றவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள்,
மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டோர்)

தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 3

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் –
அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று. கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்று

காது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் –
அரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று.

மனவளர்ச்சி குன்றியவர் –
12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.

12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று.

மனநலம் பாதிக்கப்பட்டவர் –
அரசு மனநல மருத்துவரிடம் சான்று.

பல்வகை மாற்றுத் திறனாளிகள்
3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.
வழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை



ref: http://www.scd.tn.gov.in (updated on 23rd Feb 2018)

Leave a comment

Share Your Thoughts...