மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் - enabled.in

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் வெளியிடப்படுகிறது.

Inclusion of differently abled person families under the CMCHIS without income ceiling

ஆணை :

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் ((அஉதி-II-2) துறை அரசாணை (நிலை) எண்.341; நாள்: 14.12.2012

அரசாணை படிக்க :

  • அரசாணை (நிலை) எண்.31, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, நாள் 28.6.2010.
  • அரசாணை (நிலை) எண்.169, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப (அஉதி-II-2) நலத் துறை, நாள்- 11.7.2011.
  • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரின் க.எண்.4127/தா.நா.சு.தி/ காப்பீடு/2012 நாள் 25.7.2012.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களால் 2012-13 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஏனையவற்றுடன் கீழ்க்கண்ட அறிவிப்பினை செய்துள்ளார்கள் :-

குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படும்.

2.அரசாணை (நிலை) எண்.169 அரசாணையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 1.1.2012 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மற்றும் அதற்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து காப்பீடு பெற தகுதி உடையவர்கள். பார்வை மூன்றில் படிக்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கடிதத்தில் குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

  1. தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநரின் மேற்கண்ட் கருத்துருவை”ஏற்று பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது.
  2. குடும்பத்தில் மாற்றுத் திற்னாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதல்மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிடுகிறது. இதனால் ஏற்படும் செலவினம் கீழ்கண்ட கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படும்.

“2210 மருத்துவமும் பொது சுகாதாரமும்-80 பொது- 800 ஏனைய செலவு பன்னிரெண்டாம் ஐந்தாண்டு திட்டப் பணிகள் 11 மாநிலத் திட்டம் -JJ முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம்.10 பங்குத் தொகைகள்-02 காப்புறுதிக் கட்டணம் (த.தொ.கு. 2210 80800 JJ.1020).”

அவ்வாறு சேர்க்கும்போது மாற்றுத் திறனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு குறைவான / அதிகமாக உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்க தொடர்புடைய துறையின் ஆணையர் / இயக்குநர் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநருடன்
கலந்து ஆலோசித்து நெறிமுறைகள் வெளியிட தொடர்புடைய துறையின் ஆணையருக்கும் / இயக்குநருக்கும் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநருக்கும் அரசு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வரசாணை நிதித்துறையின் அ.க்ஷாண்.67045/சுகாதாரம்-க:II/2012, நாள் 07.12.2012 இசைவுடன் வெளியிடப்படுகிறது.

பதிவிறக்கம்

வலைதளம்(Website) : https://www.cmchistn.com/

Leave a comment

Share Your Thoughts...