மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி - enabled.in

மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி

மாற்றுத்திறனாளிக்கான வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி மத்திய அரசின் கிராமப்புற அமைச்சரக வழிகாட்டுதம் மற்றும் வங்கி கிராமப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இணைந்து இலவச கோழிவளர்ப்பு பயிற்சி மாற்றுத்தினாளிகளுக்கு வருகின்ற 15.11.2018 முதல் 26.11.2018 வரை ஈரோடு கரூர் பைபாஸ்ரோடு, கொல்லம்பாளையம் பேருந்து நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளியல் நடைபெற உள்ளது.

இந்த சுயவேலை வாய்ப்பு தொழில் பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று இருத்தல் வேண்டும்.

பயிற்சி தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை (ஞாயிறு தவிர) நடைபெறும் பயிற்சிகளில் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பாக பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் புரிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்ப்பு கொள்ள வேண்டும்.

தொலைபேசி எண் 0424 – 225 8986 மற்றம் 0424 – 2400338

Leave a comment

Share Your Thoughts...