மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி NSDC சான்றிதழ்களுடன் - enabled.in

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி NSDC சான்றிதழ்களுடன்
Intact - Integrated Action trust

இன்டேக்ட் நிறுவனம் (INTACT) அறிவு சார் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக தொழிற் பயிற்சி மையத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்திக்கொண்டு வரை வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு மற்றும் அரசு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவியுடன் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கீழ்க்கண்ட பயிற்சிகளை அளிக்க உள்ளது

  • தையல் இயந்திரம் இயக்குதல் (Sewing Machine Operator) – உடல் இயக்கம் / செவித்திறன் குறைபாடுடைய குறைபாடுடையோர்
  • கணினி தகவல் பதிவு செய்தல் (Domestic Data Entry Operator) – உடல் இயக்கம் / செவித்திறன் குறைபாடுடைய குறைபாடுடையோர்
  • பராமரிப்பு பயிற்சி (House Keeping / Manual Cleaning) – சார் குறைபாடுடையோர் அறிவுசார் குறைபாடுடையோர்

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்

  • பயிற்சிக்கான வயது வரம்பு 16 வயது முதல் 45 வயது வரை
  • தொழில் பயிற்சி முடிந்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்
  • தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும் (National Skill Development Corporation)
  • இலவச சீருடை வழங்கப்படும்
  • பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்த முதல் இரண்டு மாதத்திற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும்
  • பயிற்சிக்கு வந்து செல்வதற்கான பயணப்படி ரூபாய் ஆயிரம் பயிற்சிக்குப் பின் வழங்கப்படும்
  • திறன் குறைபாடு ஏற்ப உபகரணங்கள் வாங்கி தரப்படும் (ஐந்தாயிரம் வரை ரூபாய்)

விருப்பமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொண்டு பயன்பெறவும்

மேலும் விவரங்களுக்கு

இன்டேக்ட், களத்து வீடு, கே. சாத்தனூர், திருச்சி-620021.

அலைப்பேசி : 9944879634, 887071833
மின்னஞ்சல் : intactindia@gmail.com

Leave a comment

Share Your Thoughts...