மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌ - enabled.in

கொரோனா வைரஸ்‌ (Covid-19)) நோய்‌ தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும்‌ விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இக்காலங்களில்‌ ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம்‌ வழங்கியும்‌, பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

தற்போது 30.06.2020 வரை நட்டிக்கப்பட்டுள்ள இவ்வரடங்கு காலத்தில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாட்டில்‌ மாற்றுத்திறனாளிகளுகுகான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரணத்தினை அவர்கள்‌ வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இதற்கான அரசாணை நிலை எண்‌: 311, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை துறை,

நாள்‌: 20.06.2020 நாளில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்‌:

  • மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இவ்வறிப்பினை செயல்படுத்தும்‌ முதன்மை அதிகாரி ஆவார்‌.
  • மாவட்ட ஆட்சியர்‌ தங்களுடைய மாவட்டத்தில்‌ இவ்வறிப்பினை செயல்படுத்தும்‌ துறையினை தேர்வு செய்வார்‌.
  • இவ்வறிப்பினை செயல்படுத்தும்‌ குழுவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ மற்றும்‌ இவ்வறிவிப்பினை செயல்படுத்தும்‌ துறையின்‌ மாவட்ட அளவிலான அதிகாரி இடம்‌ பெறுவார்கள்‌.
  • மாண்புமிகு முதலைமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பிற்கேற்ப இந்நிவாரணத்‌ தொகையினை மாற்றுத்‌ திறனாளிகளின்‌ வீட்டிற்கு சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்‌ மேற்கொள்வார்‌.
  • நிவாரணத்‌ தொகை வழங்கும்போது, உரிய கோவிட்‌-19 கொரோனா நோய்‌ தடுப்பு பாதுகாப்பு முறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும்‌.
  • மாற்றுத்‌ திறனாளிகள்‌, நிவாரணத்‌ தொகை வழங்க உள்ள அலுவலரிடம்‌ விநியோகப்‌ படிவத்தில்‌ உள்ள விவரங்களை அளிக்க வேண்டும்‌. மாற்றுத்‌ திறனாளிகள்‌ தங்கள்‌ தேசிய அடையாள அட்டையின்‌ அசலினை காண்பித்து அதன்‌ நகலினை நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ அலுவலரிடம்‌ சமர்ப்பித்து நிவாரணத்‌ தொகை ரூ.1000,/- பெற்றுக்கொள்ளலாம்‌.
  • நிவாரணத்‌ தொகை வழங்க உள்ளஅலுவலர்‌, இவ்விபரத்தினை தேசிய அடையாள அட்டையுடன்‌ கூடிய பதிவு புத்தகத்தில்‌ உதவி வழங்கும்‌ பக்கத்தில்‌ முத்திரையிட்டு பதிவு செய்திட வேண்டும்‌. “Covid-19 நிவாரணத்‌ தொகை ரூ.1000, வழங்கப்பட்டது” ……………………… வழங்கும்‌ அலுவலர்‌ என முத்திரையிட்டு, கையொப்பமிட வேண்டும்‌. நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ அலுவலர்‌ இரண்டு ரூ.500/- நோட்டுகளாகவே பயனாளிக்கு வழங்கவேண்டும்‌.
  • இவ்வுதவித்‌ தொகையினை மாற்றுத்‌ திறனாளிகள்‌ அல்லது அவர்களின்‌ பெற்றோர்கள்‌ அல்லது சிறப்பு சூழ்நிலையில்‌ பாதுகாவலர்களிடம்‌ மட்டுமே வழங்கப்படவேண்டும்‌.
  • வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத்‌ தொலை லழங்கும்‌ அலுவலர்‌ பகுதிக்கு உட்படாத பற்யகுதிகளை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் விபரம்‌ மற்றும்‌ மருத்துவ அடையாள அட்டை மற்றும்‌ மருத்துவ சான்றினை பெற்று அவ்வியரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலருக்கு அனுப்ப வேணடும்‌. இவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு ரொக்க நிவாரணத்‌ தொகை விநியோக படிவம்‌ மற்றும்‌ ஒப்புகை சீட்டு மாதிரிகள்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்‌ ஒப்புதல்‌ பெற்று அச்சிடவேண்டும்‌. ஒவ்வொரு புத்தகத்திலும்‌ 50 படிவங்கள்‌ இருக்கவேண்டும்‌. நிவாரணத்‌ தொகை வழங்கவுள்ள துறையின்‌ மாவட்ட அளவிலான அதிகாரி இப்புத்ததங்களை விநியோகிக்கும்‌ அலுவலர்களுக்கு வழங்கிய விபரங்களை பராமரிக்கவேண்டும்‌.
  • மாவட்ட மாற்றுத்‌ திறானளிகள்‌ நல அலுவலர்‌ நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ துறையின்‌ மாவட்ட அளவிலான அதிகாரியுடன்‌ ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்‌.
  • மாவட்ட மாற்றுத்‌ திறானாளிகள்‌ நல அலுவலர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மூலம்‌ இத்திட்ட செயலாக்கம்‌ குறித்த விளம்பரங்களை செய்யவேண்டும்‌. இவ்விளம்பரத்தில்‌ இந்நிவராணத்‌ தொகை வழங்கப்படவுள்ள நாட்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ விநியோக படிவம்‌, பூர்த்தி செய்ய அளிக்க வேண்டி விபரங்களை தெரிவிக்கவேண்டும்‌. மேலும்‌ இத்தொகை கிடைப்பதில்‌ சிரமம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்‌ மற்றும்‌ தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும்‌. இவ்வுதவி மறுக்கப்படும்‌ நிலையில்‌ அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில்‌ மாநில அளவிலான உதவி மைய எண்‌: 18004250111-ஐ தொடர்பு கொள்ளலாம்‌.
  • அரசு மறு வாழ்வு இல்லங்கள்‌ மற்றும்‌ பிற இல்லங்களில்‌ தங்கியுள்ள மாற்றுத்‌ திறனாளிகளுக்கு நிவாரணத்‌ தொகை சென்று அடைவதை மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்கள்‌ உறுதி செய்யவேண்டும்‌.
  • நிவாரணத்‌ தொகை முழுவதுமாக வழங்கப்பட்ட பின்‌ ஒப்புகை சீட்டுகள்‌ அடங்கிய புத்தகங்களை மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலரிடம்‌ நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ துறையின்‌ மாவட்ட அதிகாரி தொகுத்து ஒப்படைக்கவேண்டும்‌.
  • மேலும்‌, பயன்படுத்தாத ஒப்புகைச்சீட்டுகளின்‌ எண்ணிக்கை வ.எண்‌: ………… முதல்‌ பவ டவிரை நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ துறையின்‌ மாவட்ட அதிகாரி தொகுத்து மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலரிடம்‌ ஒப்படைக்கவேண்டும்‌.
  • மாவட்ட மாற்றுத்‌ திறானளிகள்‌ நல அலுவலர்‌ முன்னேற்ற அறிக்கையினை கீழ்க்கண்ட படிவத்தில்‌ பூர்த்தி செய்து மாநில Help Line Application-ல்‌ பதிவு செய்யவேண்டும்‌.
ரூ-1000/- நிவாரணத்‌ தொகைதேவைப்படும் விபரம்
தேதி
மாவட்டத்தின் பெயர்
தாலூகாவின் பெயர்
பயனாளிகளின் எண்ணிக்கை
வழங்கப்பட்ட தொகை விபரம்
  • நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ துறையின்‌ மாவட்ட அதிகாரி மற்றும்‌ மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுலவர்‌ தலா 5% சதவீதம்‌ நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ பகுதியினை Random-மாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும்‌. இவ்விபரத்தினை மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌, மாவட்ட ஆட்சித்தலைவருக்கும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல ஆணையருக்கும்‌ அனுப்பவேண்டும்‌.
  • நிவாரணத்‌ தொகை வழங்குவதில்‌ ஏதேனும்‌ முறைகேடு தெரியவந்தால்‌ மாவட்ட ஆட்சியர்‌ உரிய பணியாளர்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கவேண்டும்‌.
  • அரசாணையில்‌ ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலாக கூடுதல்‌ நிதி தேவைப்படின்‌ தேவையின்‌ அடிப்படையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல ஆணையருக்கு தெரிவிக்கலாம்‌. மிகுதியாக இருக்கும்‌ மாவட்டங்களிலிருந்து நிதி மறு ஒதுக்கீடு வழங்கப்படும்‌. மாவட்ட ஆட்சியர்கள்‌ தங்களுக்கு ஒதுக்கிய நிதி முடியும்‌ தருவாயில்‌ இவ்விபரத்தினை மாநில ஆணையருக்கு தெரிவிக்கலாம்‌.
  • மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இத்தொகையினை தனி வங்கி கணக்கில்‌ பராமரிக்கவேண்டும்‌.
  • மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இத்திட்ட செயலாக்கம்‌ குறித்து நாள்‌ தோறும்‌ கண்காணிக்கவேண்டும்‌.
  • அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கியுள்ள தொகையினை காலதாமதமின்றி கருவூலத்தில்‌ பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட கணக்கிற்கு வரவு வைக்கவேண்டும்‌. இதற்கான அரசாணை மற்றும்‌ முதன்மை செயலாளர்‌ / வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ அவர்களின்‌ செயல்‌ முறை கடித நகல்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்கள்‌ சம்மந்தப்பட்ட துறையுடன்‌ இணைந்து செயல்பட்டு காலதாமதத்தினை தவிர்க்க வேண்டும்‌.
  • தனித்துவம்‌ வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்க திட்ட செயல்பாட்டிற்காக இதுவரை பூழ்‌1ட-க்காக விண்ணப்பிக்காத மாற்றுத்‌ திறனாளிகள்‌ அவர்களின்‌ புகைப்படம்‌, தேசிய அடையாள அட்டை மற்றும்‌ மருத்துவ சான்றிதழ்களின்‌ நகல்‌ புகைப்படத்துடன்‌ கூடிய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றின்‌ நகல்‌ மற்றும்‌ வசிப்பிடத்திற்கான அடையாள அட்டைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றின்‌ நகலினை நிவாரணத்‌ தொகை வழங்கும்‌ அலுவலரிடம்‌ வழங்குமாறு கோரவும்‌. இருப்பினும்‌ இது நிவாரணத்‌ தொகை பெறுவதற்கு கட்டாயமில்லை எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

Download

Covid-19 relief fund for Differently abled – Guidelines

Leave a comment

Share Your Thoughts...