மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் . ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:
- மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 66-இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- மாண்புமிகு அமைச்சர் (ச.ந.(ம)சதி) அவர்கள் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் செயலராக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் நியமிக்கப்பட்டார்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் / மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைக்குமாறு அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.
- சட்டமன்ற பேரவைச் செயலகக் குறிப்பில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தில் உறுப்பினர்களாக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- மேற்காணும் சூழ்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் / மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலித்த அரசு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இணைப்பில் உள்ள உறுப்பினர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்து ஆணையிடுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன், சட்டப் பிரிவு 71- இன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளும்:-
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும்,
- மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அவர்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும் கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது கீழ்கண்ட பணிகளையும் மேற்கொள்ளும்;-
- (a) மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கொள்கைகள், செயல்முறைத் திட்டங்கள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் ஆலோசனைகளை வழங்குதல்.
- (b) மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களைக் களையும் வண்ணம் மாநிலக் கொள்கைகளை மேம்படுத்துதல்.
- (c) மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து செயல்படும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவைகளின் நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்,
- (d) மாற்றுத்திறனாளிகளின் நலன் தொடர்பாக செயல்படுத்தப்படும் மாநில அரசின் திட்டங்களின் மீதான கருத்துகளை மாற்றுத் திறனாளிகள் நலன்சார்ந்த அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பெற்று வழங்குதல்.
- (e) மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குதல், ஏதுவான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளை இழிவுப்படுத்துவதை தடை செய்தல், அவர்களுக்கான பாகுபாடுகளைக் களைதல், சேவைகள் அளித்தல், உகந்த சூழல்களை உருவாக்குதல் மற்றும் சமூகத்தில் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் குறித்த பரிந்துரைகளை அளித்தல்.
- (f) மாற்றுத்திறனாளிகளுக்கு முழு பங்கேற்பினை உறுதி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டடங்களின் தாக்கத்தினை கண்காணித்து மதிப்பீடு செய்தல். மாநில அரசால் அவ்வப்போது ஒதுக்கப்படும் பிற பணிகளையும் மேற்கொள்ளுதல்.
- மேலும், இவ்வாலோசனை வாரியத்தில் நியமனம் செய்யப்படும் அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் சட்டப்பிரிவுகள் 67 முதல் 71 வரை கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுவர்.
தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர்
மாநில அரசின் செயலாளர்கள் – அலுவல் சார் உறுப்பினர்
- அரசுச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை
- அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
- அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை
- அரசுச் செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை
- அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
- அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்து துறை
சட்டமன்ற உறுப்பினர்கள் – அலுவல் சார் உறுப்பினர்
- டாக்டர் நா.எழிலன், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
- திரு.A.G.வெங்கடாசலம், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
- திரு.சு.ரவி, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்
மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு பணியில் அனுபவம் மற்றும் நிபுணத்துவமிக்க நபர்கள் – ஐந்து உறுப்பினர்கள்
- திருமதி. எல்.வி.ஜெயஸ்ரீ. இயக்குநர், தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சங்கம் (Spastics Society of Tamil Nadu)
- டாக்டர் பி.ஆர்.லட்சுமி, நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர், மூலக்கூறு நோயறிதல், கலந்தாய்வு, விழிப்புணர்வு மற்றும்ஆராய்ச்சி நிலையம் (MDCRC),
- டாக்டர் கே.வி. கிஷோர் குமார், இயக்குநர், பான்யன் & பாம் அறக்கட்டளை (The Banyan & Balm Trust),
- திருமதி. லட்சுமி ஹரிகரன், மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா கழகம் (Madras Dyslexia Association)
- டாக்டர் சுரேகா ராமசந்திரன், தலைவர், இந்திய டவுன் சின்ட்ரோம் கூட்டமைப்பு (Down Syndrome Federation of India)
மாவட்டங்களிலிருந்து (சுழற்சி அடிப்படையில்). ஐந்து உறுப்பினர்கள்
- டாக்டர் வி.நாகராணி, நிறுவனர்/அறங்காவலர், ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், எண்.47,புனித தோமையர் தெரு, காமராஜபுரம், பட்டாபிராம், திருவள்ளூர்-600 072
- திருமதி.எஸ்.சிவகாமி, எண்:36, சிதம்பரம் சாலை, சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டம், அரியலூர் -621 802
- திரு.ஏ.கே.செல்வம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம், மேல நெம்மக்கோட்டை, ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.
- திரு. எஸ். சிவகுமார், 3/3, திலகர் மைதானம், சின்னபுளியம்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் – 626 101.
- திரு. டி. ஜாகீர் உசேன், 67/2, அண்ணா சாலை, சின்ன திருப்பதி, சேலம் 636 008.
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிலிருந்து- பதினொன்று உறுப்பினர்கள்
- திருமதி. ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன், Disability Rights Alliance Tamil Nadu, சி.1அன்பொளி அடுக்ககம், 7/4, குருவப்பன் தெரு,கோட்டூர்
- திருமதி. வி.யசோதா, டிசம்பர் 3 இயக்கம், 33, செக்கு மேட்டுத்தெரு, கள்ளக்குறிச்சி 606 202.
- செல்வி. ப்ரித்தி சீனிவாசன், சோல் பிரி குழு வந்தனா, 108/1, மணகுளவிநாயகர் கோயில் தெரு, செங்கம் சாலை, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் எதிர்புறம், திருவண்ணாமலை மாவட்டம்,
- திருமதி ஜே.செல்வகுமாரி, தமிழ்நாடு காதுகேளாத மகளிர் சங்கம், 17, புதிய காமராஜர் நகர், 4வது காலனி, ராயபுரம்,
- செல்வி.டி.கஸ்தூரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், மேலத்தெரு,தென்னமநாடு தெற்கு, தென்னமநாடு, ஒரத்தநாடு வட்டம், தஞ்சாவூர் 614 625,
- திரு.எஸ்.முத்துகுமார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை, 4/36, குழந்தைபட்டி காளியம்மன் கோயில் தெரு, சீலப்பாடி அஞ்சல், முள்ளிப்பாடி கிராமம், திண்டுக்கல் 624005.
- திரு.டி.கே. விஜயகுமார், 1/148, தைய்யகுனி(H). கொன்னச்சல் அஞ்சல், எருமாடு, நீலகிரி- 643239,
- திரு. கே.ரகுராமன், கர்ண வித்யா பவுண்டேசன், 1ஏ, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை 600059.
- திரு. எஸ்.துரைராஜ், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கம், 18-19, தனலெட்சுமிகார்டன், முகாசிபுலவன்பாளையம் (கிராமம்), வெள்ளோடு, பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
- திரு. எம். கோபால கிருஷ்ணன், Progressive Association of the Differently Abled, எண்.21, டாக்டர் அப்துல் கலாம் தெரு, விவேகானந்தா நகர், பெரமனூர், மறைமலை நகர்,
செங்கல்பட்டு – 603209. - திரு.நா.கருணாநிதி, C2/18, பொதுப்பணித்துறை குடியிருப்பு,தாடண்டர் நகர், சைதாப்போட்டை
(iv) மாநில வர்த்தக மற்றும் தொழிற் சபை சார்பாக. மூன்று உறுப்பினர்கள்
- திரு. எஸ், அன்புராஜன், தமிழ்நாடு சிறு மற்றும் குறு நிறுவனங்கங்களின் கூட்டமைப்பு (TANSTIA) எண்.10, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி, சென்னை – 600 032.
- திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், மண்டல துணைத் தலைவர், அகில இந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பு (AIMO),ட்ரியடாஸ் (Triadas) எஸ்.1, இரண்டாவது தளம், எண்.21, சீனிவாச நகர், கந்தன்சாவடி,பழைய மாமல்லபுரம் சாலை,சென்னை-96.
- திரு.டி.வி.ஹரிகரன், துணைத் தலைவர், குறு வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, 10, ஜி.எஸ்.டி. சாலை, கிண்டி,சென்னை 32.