மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகளில் விரைவில் தீர்வு காண ஏதுவாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க மாற்றுத்திறனாளிக்கான சட்டம் 2016 எண் 84 மற்றும் 85 வழிவகை செய்கின்றன. அதன்படியும் மற்றும் தமிழக அரசானைகளின்படியும் (குறிப்பிடல் இந்த பகுதியின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு செயல்படும்.
சிறப்பு நீதிமன்றங்கள்
குற்றங்களை விசாரிப்பதற்கு சென்னையில் முதன்மை நீதிபதி / சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் / மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படும்.
சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள்
சென்னையில் முதன்மை நீதிபதி / சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும், இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி / மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகாளக செயல்படுவார்கள்.
சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்
சிறப்பு அரசு தரப்ப வழக்கறிஞராக (மனித உரிமைகள்) பணிபுரிபவரே, கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் கீழ் வரும் வழக்குகளையும் கையாள்வார்.
மேலும் விபரங்களுக்கு
தங்களது மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் அலுவலரை சந்தித்து வழக்கு தொடுத்தல், சந்தேகங்கள் மற்றும் அனைத்து விதமான சட்டங்களையும், அதை அணுக வேண்டிய முறைகளையும் தெரிந்துகொள்ளவும்.
குறிப்பிடல் பதிவிறக்கங்கள்
- G.O. (Ms).No : 246 date: 21.05.2019
- Letter No.2537/DAP-3 date : 10.09.2019
- ந.க. எண் 9566 நாள் 21.09.2019
The Rights of Persons with Disabilities Act, 2016 – Special Court
Chapter XIII – Special Court
- 84 – Special Court : For the purpose of providing speedy trial, the State Government shall, with the concurrence of the Chief Justice of the High Court, by notification, specify for each district, a Court of Session to be a Special Court to try the offences under this Act
- 85 – Special Public Prosecutor :
- (1) For every Special Court, the State Government may, by notification, specify a Public Prosecutor or appoint an advocate, who has been in practice as an advocate for not less than seven years, as a Special Public Prosecutor for the purpose of conducting cases in that Court.
- (2) The Special Public Prosecutor appointed under sub-section (1) shall be entitled to receive such fees or remuneration as may be prescribed by the State Government.
குறிப்பு : இங்கு குறிப்பிட பட்ட தகவல்கள் முழுவதும் நன்மகதன்மையற்றது. நீங்கள் தங்கள் அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் அலுவலரை சந்தித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளவும். இவை அனைத்தும் விழிப்புணர்வுக்கான திரட்டப்பட்ட செய்திகள் ஆகும்.