இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில், கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
கிளர்க்ஸ் (Clerks)
மொத்த காலியிடங்கள் : 12,075
மாற்றுத் திறனாளிக்கான மொத்த காலியிடங்கள் : 624
முக்கிய தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 17.09.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 09.10.2019 |
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் | 09.10.2019 |
தேர்வு நடைபெறும் தேதிகள்:
முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 07.12.2019, 08.12.2019, 14.12.2019 & 21.12.2019
முதன்மைத்தேர்வு நடைபெறும் தேதி: 19.01.2020
தேர்வுக்கட்டணம்:
- எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.100
- எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் தவிர மற்ற பிரிவினர் – ரூ.600
வயது வரம்பு: (01.09.2019 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கூடுதலாக பகுதி சார்ந்த மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.ibps.in/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, விளம்பர தகவல்களை பார்க்கவும்
Nhdfc loan through PNB Trichy Tamilnadu for Rs.50000/-for 58 year old self employed low vision 75%disablity person.self employed for the past 32 years