மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
அரசாணை (நிலை) எண். 03
நாள்:17.04.2020

அரசாணை
- அரசாணை (நிலை) எண்.152, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள்.23.03.2020, |
- மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண்.3/நிர்.2/2020, நாள். 24.03.2020.)
மீள படிக்கப்பட்டது: - அரசாணை (நிலை) எண்.2, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நாள்.31.03.2020.)
4, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடித ந.க. எண்.3/நிர்.2/2020, நாள். 15.04.2020.
மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தவிர்க்க அத்தியாவசிய பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிடவேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், மேலே இரண்டில் படிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, தடை உத்தவு பிறப்பிக்கப்பட்ட நாளான 24.03.2020 முதல் 14.04.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து (Exemption) ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையினைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து 15.04.2020 முதல் 03.05.2020 வரை மற்றும் மீண்டும் கால நீட்டிப்பு செய்யும் நேர்வில் அந்த காலத்திற்கும் சேர்த்து மாற்றுத்திறனாளிகள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.
4. மேலே பத்தி 3ல் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேலே 1ல் படிக்கப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 15.04.2020 முதல் 03.05.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து (Exemption) அரசு ஆணையிடுகிறது.
Download
