சில வகை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து மருந்துகளை எடுப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதாலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதலாம் அல்லது அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய மாநில அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின் கடமையாகும்.
இங்கு குறிப்பிட பட்டுள்ள குறைந்தபட்ச தேவைகளை அவர்களுக்கு செய்வது மூலம் நாம் அவர்களை பாதுகாக்க முடியும்.
- மாற்றுத் திறனாளி / நீண்டகால சுகாதார நிலை கொண்ட ஊழியர்களுக்கு நியாயமான மாற்றங்களைச் செய்ய வேண்டும், அவரகள் வீட்டிலிருந்து வேலை செய் அனுமதி அளிக்க வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகள் ஊழியர்களை ஆதரித்து, அவர்களுக்கு தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நபர்களும், மாற்றுத் திறனாளிகளும் சுகாதரத்துடனும் மற்றும் முன்னேற்படுடனும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகளை மத்திய மாநில அரசுகள், சுகதார அமைச்சகம், அலுவலக பொறுப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் அக்கறையுள்ள பொறுப்புகளுடனும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்ய முன்வர வேண்டும்.
- கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட மாற்றுத் திறானளிகளுக்கு ஊதியம் பிடித்தல் இல்லாமல் வழங்க வேண்டும்.
- மாற்றுத் திறானளிகள் நேரில் ஆஜராக வேண்டிய சந்திப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அவசர நிலை செயல்படுகள்
- அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திகொண்டு, அதை தங்களது உறுப்பினர்கள் அனைவருக்கும் எவ்வாறு தொரடர்ப்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியபடுத்த வேண்டும்.
- அவசரகால குழுக்கள் அரசுடன் இணைந்து மாற்றுத்திறனாளிக்கு மருத்துவ உதவி வழங்க ஏற்படுகள் செய்ய வேண்டும்.
- மத்திய மாநில மற்றும் சுகாதர துறைக்கு தேவையான விழிப்புணர்வுகளை குழுக்கள் ஏற்ப்படுத்த வேண்டும்.
- அவசரகால குழுக்கள் மருத்துவ உபகாரணங்கள, மருந்துகள் மற்றும் தேவைகளை உடனடியாக உறுப்பினர்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.
இவண்
– Sathasivam Kannupayan
Accessibility Specialist – Digital / Environment
+91 9840 515 647
மேலும் விரிவாக தெரிந்து கொள்ள கொரோனா வைரஸ் பற்றி மற்றுத்திறனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 புள்ளிகள் படிக்கவும்