வித்யாதன் உதவிப்பணம் - சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021 விண்ணப்பிக்க வரவேற்கிறது. - enabled.in

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021 விண்ணப்பிக்க வரவேற்கிறது. தமிழ் நாடு வித்யாதன் உதவிப்பணம்: (குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் பத்து வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு மட்டுமே பொருந்தும்)

சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு.S.D.ஷிபுலால், இன்போசிஸ்) மற்றும் திருமதி.குமாரி ஷிபுலால்,(காப்பாளர்) கட்டமைப்பு பெற்று வித்யாதன் உதவிப்பணம் நிகழ்ச்சியின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. உதவிப்பணம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் உதவிப்பணம் பெறும் திட்டம்-2021:

  • இந்த உதவிப்பணம் பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
  • பத்தாம் வகுப்பு 2021 பொதுத்தேர்வில் 60 சதவீதத்திற்கும் மேலும், உடல் ஊனமுற்றோருக்கு 50 % மதிப்பெண்களுக்கு மேலும் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும் (தமிழ் நாடு அரசு அறிவுருத்தலின்படி 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களாக கருதப்படும்).

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் August 31, 2021 க்கு முன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கேள்விகளுக்கு, தயவுக் கூர்ந்து vidyadhan.tamilnadu@sdfoundationindia.com
என்னும் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 07339659929/8792459646 ஜேக்கப் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள்.

திருமதி.குமாரி ஷிபுலால், காப்பாளர், சரோஜினி தாமோதரன் நிறுவனம் கூறுவதாவது, “ஒவ்வொரு தேர்ச்சியடையும் ஆண்டுக்கும், எங்களின் உழைப்பு ஒவ்வொரு சமுதாய அடிநிலை வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி பயிலும் உரிமையினை கொடுத்து வருகிறோம். கல்வி எனபது வாழ்வின் கடவுச்சீட்டு என்று நம்புகிறேன்.

சரோஜினி தாமோதரன் நிறுவனத்தை பற்றி:

சரோஜினி தாமோதரன் நிறுவனம் சமுதாயத்தின் மீது புலனுணர்வு மூலம் வெளிப்பட்டு தோன்றியது. திருமதி.குமாரி ஷிபுளால் மற்றும் S.D.ஷிபுளாளின் வலிமையான செயலின் மூலம் 1999ல் தொடங்கப்பட்டு சிறியளவில் ஆலப்புழ, கேரளாவில் உதவிப்பணம் கொடுக்க ஆரம்பித்து தற்போது கல்வி, ஓய்வூதிய திட்டம், ஊட்டசத்து, இயற்கை விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பலத் துறைகளில் உதவி அளிக்கிறது. மேலும் அக்ஷய ஸ்ரீ விருது இயற்கை விவசாயத்திற்கு வழங்குகிறது.

சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021 விண்ணப்பிக்க வரவேற்கிறது.

Leave a comment

Share Your Thoughts...