தேசிய அளவில் நடைப்பெற்ற சக்கர நாற்காலி கூடைபந்து போட்டியில் (Wheelchair Basketball ) தமிழக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
பஞ்சாபில் நடைப்பொற்ற சக்கர நாற்காலி கூடைபந்து போட்டி 2019ல் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும், ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி வாகை சூடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இறுதி போட்டியில் தமிழக பெண்கள் பிரிவு அணி மகாராஷ்டிரா அணியை எதிர்கொண்டு விளையாடி 14:25 என்ற விகிதத்தில் தோல்வியடைந்தது இரண்டாம் இடத்தை பெற்றது.
ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்திற்க்கான போட்டியில் தொலுக்கான அணியை 42:20 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றது.
தமிழக மாற்றுத்திறனாளிகள் அணிக்கு விளையாட்டுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, சிறப்பு பயிற்சி மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், எதிர் வரும் தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபொற உதவியாக இருக்கும்.