ஹெலன் கெல்லரின் 139 ஆவது பிறந்தநாள் விழா - enabled.in
ஹெலன் கெல்லரின் 139 ஆவது பிறந்தநாள் விழா
ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968)

தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு மேற்குக் கிளையின் நாற்பதாவது ஆண்டுவிழா மற்றும் ஹெலன் கெல்லரின் 139 ஆவது பிறந்தநாள் விழா ஆகியவைகளைக் கொண்டாடும் விதமாக, 30.06.2019 அன்று மாபெறும் விழா கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வினாடி வினா மற்றும் Spell Bee ஆகிய போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் மற்றும் பிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்புகள்:

போட்டிகளில் கலந்துகொள்பவர்கள், நடப்புக் கல்வியாண்டில் ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களும், இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது.

போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் 23/6/2019 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்துப் போட்டிகளிளும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

Spell Bee போட்டிக்கான குறிப்புகள்:

  • Spell Beeபோட்டி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே நடத்தப்படும்.
  • கலந்துகொள்பவர்கள், கேட்கப்படும் வார்த்தைகளை எழுத்துப் பிழையில்லாமல் வாய்மொழியில் கூறவேண்டும்.
  • வார்த்தைகள் இரண்டு முறை சொல்லப்படும்.
  • பதிலளிக்க ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

வினாடி வினா போட்டிக்கான குறிப்புகள்:

  • மாணவர்கள் குழுவாக இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு குழுவும்மூன்று நபர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்
  • பள்ளி மாணவர்களுக்கு நான்கு சுற்றுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்கு மூன்று சுற்றுகளாகவும் போட்டி நடைபெறும்.
  • பள்ளி அளவில் இருபது அணிகளும், கல்லூரி அளவில் முப்பது அணிகளும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
  • கேள்விகள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016, மத்திய மாநில அரசுகளால் வெளியிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்,மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வுத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள், தொடர்பானவையாக அமையும்.
  • ஒரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இரு அனிகள் கலந்துகொள்ளலாம்.

முன்பதிவு மற்றும் பிற தகவல்களுக்கு:

அலைப்பேசி எண்:

கமலக்கண்ணன் – 9715111913 / 8903323764

புலணம் (Whats App)- 9715111913

மின்னஞ்சல் முகவரி: nfbkovai@gmail.com

Leave a comment

Share Your Thoughts...