தன் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தன்னை சிறுமைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் செல்வி அருணாதேவியை சந்தித்தபோது மிகவும் பிரம்பமித்து போனேன்.
அருணாதேவி விருதுநகரை சேர்ந்தவர். அனைவரையும்போல பள்ளிப்பருவத்தில் பல கனவுகளுடன் சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்தவருக்கு 11ம் வகுப்பில் மிகவும் கடினமாக சோதனை ஏற்ப்பட்டது. உலகை கண்டு பயப்படமால் துள்ளித்திரிந்தவருக்கு இனி உலகை காண முடியது என்று அப்போதுதான் தெரிந்தது, ஆம் அவருக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தது. துங்கும் போது மட்டும் இரவைக்கண்ட அவர் இனி காலம் முழுவதும் இரவைக் நண்பனாக
பாவிக்க வேண்டிய சூழ்நிலை. கண்ணீரைக்கூட பிரித்து பார்க்க முடியாத கண்கள். குடும்ப சூழ்நிலை மேலும் அவரை தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அனுப்பியது.
அவருடைய எண்ணங்கள் அவரை தீப்பெட்டி தொழிற்சாலையில் இருக்க அனுமதிக்கவில்லை. படித்து முன்னேர வேண்டும் என்ற உத்வேகத்தில் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரில் சமூக சேவைப்பிரிவில் முதுகலைப் பட்டம்(MSW) முடித்தார். தென்னிந்தியாவில் முதன்முதலில் இப்பிரிவில் பட்டம் பெறும் முதல் கண்பார்வையற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டார். தற்போது M.Phil பட்டத்தை பாரதிதாசன் கல்லூரில் படித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது Project Coordinator ராக பணிபுரிந்து வருகிறார், மேலும் பார்வைற்ற பெண்களின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காக பல முயற்ச்சிகளையும் எடுத்து வருகிறார்.
இவர் இதுவரை 6 விருதுகளையும், மூன்றுக்கும் மேற்ப்பட்ட ஆரய்ச்சிக்கட்டுரைகளுக்கும் செந்தகாரர் ஆவர்.
இவருக்கு ஒளி இல்லையென்றாலும் பலருக்கு ஒளியாக விளங்கிக்கொண்டிருக்கிறார்.
நேர்காணல் www.enabled.in ல்லிருந்து சதாசிவம்