Enabled, Author at enabled.in - Page 25 of 42
பார்வையற்றோர் பயிற்சி மையம்

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.

வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

Supply of free Braille Books for Visually impaired students

Supply of free Braille Books for Visually impaired students

பார்வையற்றோருக்கான அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் அச்சடித்த புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்

சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற 220 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் மடிக் கணினியுடன் சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்பேசும் சாப்ட்வேர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமை‌ச்சர் உத்தரவிட்டுள்ளார்.