தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற மாணவ/மாணவிகளுக்கு விருது
திட்டத்தின் சுருக்கம்
தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கீழ்கண்டவாறு சிறப்பு விருது வழங்குதல். இது தவிர தமிழ் நாட்டிற்குள் இவர்களது உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்.
திட்டத்தின் விவரம்
12 ஆம் வகுப்பு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு
முதல் பரிசு – ரூ.50000.00
இரண்டாம் பரிசு – ரூ. 30000.00
மூன்றாம் பரிசு – ரூ. 20000.00
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப்பெறுபவர்களுக்கு
முதல் பரிசு – ரூ.12000/-
இரண்டாம் பரிசு – ரூ.7500/-
மூன்றாம் பரிசு – ரூ. 4500/-
(ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)
10 ஆம் வகுப்பு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு
முதல் பரிசு – ரூ.25000.00
இரண்டாம் பரிசு – ரூ.20000.00
மூன்றாம் பரிசு – ரூ.15000.00
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு
முதல் பரிசு – ரூ.6000.00
இரண்டாம் பரிசு – ரூ.4500.00
மூன்றாம் பரிசு – ரூ.3000.00
(ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)
பிரெய்லி பாடப் புத்தகங்கள் வாங்க ஆண்டு ஒன்றிற்கு
10ம் வகுப்பு – 3000/-
12ம் வகுப்பு – 4000/-
விடுதி கட்டணம் மாதம் ஒன்றிற்கு
10ம் வகுப்பு -2000/-
12ம் வகுப்பு -3000/-
மேல் படிப்புக்கு
10ம் வகுப்பு -4000/-
12ம் வகுப்பு -6000/-
உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49