Autism Archives - Page 7 of 12 - enabled.in
Srilalitha Learning Centre for Special Children

Srilalitha Learning Centre for Special Children

Sri Lalitha – is a creative school catering for the children in the age group of 5 to 15years with moderate Learning Difficulties, Slow Learners, Drop Outs, Speech Problem, Communication Disorder and Autism. The learning centre seeks to provide a friendly, caring and safe environment in which the children can develop their potential by having equal access to quality educational opportunities and experiences.

திருப்பூரில் மருத்துவ முகாம்

திருப்பூரில் மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் சார்பில், நாளை – திருப்பூரில் மருத்துவ முகாம்பொங்கலூர் பி.வே.கே., பள்ளியிலும், 13ம் தேதி பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அறுவை சிகிச்சை, செயற்கை உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடக்கிறது.

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளர்.

வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமை‌ச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும் . மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டும். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படும்.

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.