
சுயதொழில் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.5 லட்சம் வங்கிக் கடன்
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செயவதற்கு நிபந்தனையின்றி ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவதற்கான சிறப்பு சலுகை விளக்க கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை முன்னோடி வங்கி அலுவலர் ஆர்.பெருமாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், மதுரை காதி கிராமத் தொழில்கள் ஆணைய உதவி டி.வி.அன்புச்செழியன், சிவகங்கை […]