Success Stories Archives - Page 11 of 23 - enabled.in
Bharatiya Yuva Shakti Trust

Bharatiya Yuva Shakti Trust

அர்ஜுன்குமார் ஒரு மாற்றுத்திறனாளி. பிழைப்புத் தேடி புதுடெல்லி வந்தவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. பிச்சை எடுக்கத் துவங்கினார். சுமார் ஓராண்டாக தொடர்ந்த இந்த அவலநிலை ‘பிஓய்எஸ்டி’ என்ற அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் கடன் வசதியால் மாற, இன்று தொலைத்தொடர்பு வசதி மைய உரிமையாளர் என்றாகிவிட்டார் அர்ஜுன். அவரது வருட வியாபாரம் 12 லட்சத்துக்குக் குறைவதில்லை!

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழன்றபடி அந்த வளைக்கரம் அனாயசமாக வாளை வீச, பார்க்கும் நமக்கோ பிரமிப்பு. வாளின் வேகம் காற்றைக் கிழித்து கொண்டு பாய்ந்தது. வளைக்கரம் வாள் வீசுவது புதிதா என்ன? இல்லை. ஆனால் இந்த வளைக்கரத்துக்குச் சொந்தமான இந்திரா- மாற்றுத் திறனாளி என்பதுதான் புதிது. இவர் தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்’ என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும்.

‘தில்’லானா தைரியாம்பாள் !

‘தில்’லானா தைரியாம்பாள் !

சுடிக்ஷ்னா வீரவள்ளியின் நாட்டியத்தைப் பார்த்து! இவரின் நாட்டியத்தை சிறப்பாக ரசிக்க வைக்கும் காரணங்கள் மூன்று. அவரது அர்ப்பணிப்பான நடனம்; சிகாகோவில் வாழும் இந்தியரான இவர், சர்வதேச அளவில் பல மேடைகள் கண்டிருந்தாலும்… இந்த பாரம்பரிய வேரைத் தேடி சென்னைக்கு ஓடி வந்திருக்கும் அவரின் ஆர்வம்; மூன்றாவதாக… சுடிக்ஷ்னா, ஒரு மாற்றுத்திறனாளி!

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

மாற்றுத்திறனாளி ஆசிரியரை மலைக்கிராம பள்ளியில் பணி நியமனம் செய்ததால், அவர் தினமும் 128 கி.மீ., தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்தும், எட்டு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்தும் பள்ளி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார்.

அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளியான இவருக்கு, பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலை. பெற்றோரும் செவித்திறன் குறைவுடையோர் ஆவர். கிராமப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வழக்கமான தொல்லைகள் இவருக்கும் இருந்தது.இதனால் இவரது பொழுதுகள் பெரும்பாலும் கிராமத்தை கடந்தே நகர்ந்து வந்தன. அருகில் உள்ள எழுதூர்பாட்டி கண்மாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிறைய கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. இதுவே சப்பாணியின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. இங்கு வரும் மயில்களை கண்டு ரசிப்பதும், விளையாடுவதுமாக பொழுதை கடத்தி வந்தார்.

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

மாற்றி யோசிக்கலாம்

மாற்றி யோசிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சாதிப்பதற்கான வாசல்கள் அவர்களுக்குத் திறந்திருக்கின்றனவா? வாழ்க்கையை சாதிப்பதற் கான ஒரு களமாகக் காண்பவர்கள் வெகு சிலரே. ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்த நம்மில் பலருமே படித்து ஒரு வேலையில் சென்று அமர்வதற்குள் காற்றுப்போன பலூனாக மாறிவிடுகிறோம். இந்த நிலையில் ஏதோ ஒரு திறன் குறைவுடன் பிறக்கும் மாற்றுத் திறனாளிகள், அந்தக் குறையையும் மீறி வாழ்க்கையில் வெற்றிகாண்பது என்பது ஒரு சவால்தான். ஆனாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிகண்டவர்கள் பலர்.

சாமுவேல் – மாற்றுத்திறனாளி உதாரண மாணவன்!

சாமுவேல் – மாற்றுத்திறனாளி உதாரண மாணவன்!

பட்டினி கிடந்து பெற்றோரை பணிய வைத்த மாற்றுத்திறனாளி சாமுவேல். ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் ஜெபஞான ஜெயராஜ். பனை மர ஓலைகள் வெட்டி கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளும் சா‌‌ய்கிருஷ்ண்

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளும் சா‌‌ய்கிருஷ்ண்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி செல்வன் சா‌‌ய்கிருஷ்ணா கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா‌ய்க்கான காசோலையினை முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதா வழங்கினார்.