Disability not a deterrent for him
After the accident, he had to forego school for several months but the gritty youngster was determined to do something in his life and not depend on charity.
After the accident, he had to forego school for several months but the gritty youngster was determined to do something in his life and not depend on charity.
நாம்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம், நமக்குப் பின் வருபவர்களாவது கஷ்டப்படாமல் இருக்க நாம் வழிகாட்டுவோமே….யோசிக்காமல் கல்லூரியில சேர்ந்தேன். பாடங்களை மற்றவர்களின் உதவியோடு படித்து முடிப்பதற்குள், பல பிரச்னைகள் வந்தது. படித்து சொல்ல மற்றவர்களுக்கு நேரம் இருக்கணும். சந்தேகங்களை கேட்டால் அதை விளக்குவதற்கு பொறுமை வேணும்.எங்களுக்குனு தனி கல்லூரிகள் கிடையாது.
நாங்க யாரும் மனசு உடைஞ்சுபோகலை. நாங்க ஒண்ணு சேராம இருந்திருந்தா, சிலர் பிச்சைக்காரங்க ஆகியிருப்போம். சிலர் தற்கொலையே பண்ணியிருப்போம். ஒண்ணா சேர்ந்ததால், பிரச்னைகளை சமாளிச்சுப் போராடி நிற்கிறோம்.
எந்தத் திருத்தமும் இல்லாமல், ஒரே மூச்சில் நேர்த்தியாக ஓவியம் வரைவது ஜனார்த்தனன் சிறப்பு. ஆனால், ஓவியம் வரைய ஜனார்த்தனன் தூரிகை பிடிப்பது கைகளால் அல்ல: தனது வாயால்!
வெற்றிக்கு ரகசியம் எல்லாம் என்னிடம் இல்லை. ‘நீங்கள் எப்படியோ… அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இருக்கும் திறமையை வைத்து முன்னேறுங்கள்.
உடலில் சிறு ஊனம் இருந்தாலே, விதியை நொந்தபடி முடங்கிக் கிடப்பவர்கள் பலர். ஆனால், ”இரு கைகளையும் இழந்த ஒருவர், இரண்டு சக்கர வாகனம் தொடங்கி, டிராக்டர் வரை ஓட்டுகிறார். ஏழையாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் மன தைரியத்தைப் பார்த்தால், ஹெலிகாப்டரைக் கொடுத்தால்கூட ஓட்டுவார் போல இருக்கிறது…’
ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
மாற்றுத் திறனாளியான நான் ஏற்கெனவே மனதளவில் கடுமையான தாழ்வு மனப் பான்மையில் இருந்தேன். யாருடனும்விளையாடுவது, இணைந்து பழகுவது இல்லை. சமூகத்தின் புறக்கணிப்புகளில் இருந்து தப்பிக்க நான் புத்தகங்களிடம் சரணடைந்தேன்.
நான் குமார். எனக்கு, குளித்தலை பக்கத்துல வலையபட்டி கிராமம். ஒரு தீ விபத்துல என் வலது கை விரல்கள் கருகி, நரம்புகள் பின்னிக்கிருச்சு. இப்போ என் வலது கை இயல்பா இயங்காது. அந்த விபத்துல இருந்தே கிட்டத்தட்ட நடைப் பிணமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். அப்போ, டி.வி-யில் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குரூப்பைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி இளைஞர்களின் டான்ஸ் ஷோ பார்த்தேன். நம்பவே முடியாத டான்ஸ்.
மாற்றுத் திறனாளிகளுக்கான காரை, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் எனும் மாற்றுத் திறனாளியே உருவாக்கியுள்ளார். ”காரை இயக்க கால்கள் அவசியம் இல்லை. எந்த வகையான காரையும் மாற்றி அமைத்து சிரமமின்றி ஓட்ட முடியும்” என்கிறார் உதயகுமார்.