Visual impairment Archives - Page 10 of 15 - enabled.in
தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும் . மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டும். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படும்.

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

Cash prize and assistance for visually impaired students

Cash prize and assistance for visually impaired students

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கீழ்கண்டவாறு சிறப்பு விருது வழங்குதல். இது தவிர தமிழ் நாட்டிற்குள் இவர்களது உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்.

Free Computer Training Course

Free Computer Training Course

Free Computer Training Course – Six month training is given for Visually impaired persons at Regional Centre of National Institute for Visually impaired, Poonamallee at Chennai. A stipend of Rs.300/- per month is given to the Trainees.

Pre-Recorded Cassettes and Tape Recorders for visually impairment

Pre-Recorded Cassettes and Tape Recorders for visually impairment

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்

Scribe Assistance for visually impairment student

Scribe Assistance for visually impairment student

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வில் வினாக்களுக்கு வாய் மூலம் அளிக்கும் பதிலினை எழுதும் உதவியாளருக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.50/- வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.