“மரண கானா” விஜி - enabled.in

“மரண கானா” விஜி

“Marana Gaana” Viji

Marana gaana viji
Marana gaana viji

மாற்றுத்திறானளியான மரண கானா விஜி தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களையும் அதனை வெற்றிப்பாதையாக மாற்றி அமைத்து இன்று தன்னை தனி மனிதனாக உலகிற்கு வெளிக்காட்டி சென்னையில் வாழ்ந்து வருகிறார். “மாநகர் ஜித்தன் மரண கானா” விஜி என்றழைக்கும் இவர், நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறார்.
விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது”  இந்த ஆட்டமும் இசையும்தான் அவருக்கு இசை ஞானத்தை கற்றுத்தந் தது. இன்றைக்கு சென்னையிலே மரண கானா விஜி மக்களி டையே பிரபலம் அடைந்து வருகின் றார். மரண வீடுகளில் விடிய விடிய காப்பித் தண்ணி குடித்துக் கொண்டு யாருக் காகப் பாடுகின்றார் விஜி? செத்துப் போன வன் எழுந்து கேட்கப் போகின்றானா? இல்லை. செத்துப் போனவரின் நல்ல, கெட்ட குணங்கள், மனிதஉறவுகள், ஆசாபாசங்கள் இவற்றோடு கூடவே இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை, விஜியின் தோல் இசைக்கருவியான ‘டேப்’ வழியே வந்து விழுகின்றது.
விஜி உடல் ஊனத்துடன் பிறந்ததால் இவரது தாய் தந்தை சென்னை மெரினா கடற்கரைக்கு இலவசமாக கொடுத்து விட்டார்கள். மெரினா இவரை வளர்த்தாலும் இவருக்கு பல நண்பர்களையும் கொடுத்தது. சிறிய வயது முதல் திருட்டு, மது போன்றவற்றில் நட்டம் இருந்தது. பிறகு இவரை சென்னை ராயபுரம் மாயனம் இவரை வளர்க்க ஆரம்பித்தது.
இவருக்கு 10 வயது வரை இவரது பெயர் தெரியாது. இங்கு தான்
தன்னை உலகிற்கு வெளிப்டுத்துவதற்கு உதவியாக இருந்தது. ஆம் இவர் கான பாடுவதில் தனக்கு திறமை இருப்பதாக கண்டாறிந்த இடம் இந்த மாயனம் தான்.  இறந்தவர்களுக்கு தான் கானா பாடுவதன் மூலம் தன்னை இவ்வுலகற்கு வெளிப்படுத்தினார்.  பல இன்னல்கள் துன்பங்கள் சந்தித்தாலும், தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னையும் தன் திறமையும் வெளிக்கொணர்வதில் மாற்றவர்களுக்கு முன் மாதிரியாக  இருக்கிறார்.

இவரை முதன் முதலில் பிபிசி தொலைக்காட்சி 2004ம் ஆண்டு உலகிற்கு வெளிப்படுத்தியது. இதுவரை 32 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், 150க்கு மேற்ப்பட்ட முறை செய்திதாள்களிலும் இவரைப்பற்றி வெளிவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இவரைப்பற்றிய சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
தற்போது ராணி வார இதழில் “சில கன்னியரும் பல கல்லறைகளும்” என்ற தொடர்மூலம் தன் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார். மேலும் இவர் பெரியார் விருதை பிப்ரவரி 7, 2010 பெற்றுள்ளார்.

நேர்காணல்: சதாசிவம் கண்ணுப்பையன்  www.enabled.in லிருந்து

“மாநகர் ஜித்தன் மரண கானா” விஜியை தொடர்பு கொள்ள : 9941163468

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...

%d bloggers like this: