தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச் சலுகை
திட்டத்தின் சுருக்கம்
அ)மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் அவர்களது இல்லத்திலிருந்து பயிலும் பள்ளிக்குச் சென்று வர இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது. பார்வையற்ற நபர்களும் 100 கி.மீ வரை (சென்று திரும்ப) எவ்வித நிபந்தனைகளுமின்றி இலவசமாக அரசுப் பேருந்துகளிலும் செல்ல இலவச பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.
ஆ)மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் அவர்தம் உதவியாளருடன் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்ககளுக்கு வருடாந்திர வருமான உச்ச வரம்பு இல்லை.
இ)செவித்திறன் பாதிக்கப்பட்டு, வாய் பேச இயலாதவருக்கும், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கும் பள்ளி,கல்லூரி,மருத்துவமனை, பயிற்சிக்கூடம், பணியிடம்,சுய தொழில் புரியும் இடம் ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு இடத்திற்கு 100 கி.மீ.க்கு மிகைப்படாமல் இலவசமாக சென்று வர அனுமதிக்கப்படுகிறது.
ஈ) பார்வையற்றோரும், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் ஆண்டுக்கொரு முறை தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியூருக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக சென்று வர இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.
உ)ஏற்கனவே நடைமுறையிலுள்ள பேருந்து பயணச் சலுகையுடன் கூடுதலாக, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
அ) ஊனமுற்ற நபராக இருத்தல் வேண்டும். ஆ)அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பயிற்சி நிலையத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
சலுகைக்கு மாற்றுத் திறனாளிகளுக்க்கான தேசிய அடையாள அட்டையின் அசலை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து, அதன் நகல் ஒன்றினை அவரிடம் வழங்கி, 25ரூ பயணக் கட்டணத்தினைச் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 /
District Collector / Managing Director of the Metropolitan / State Transport Corporation.