தமிழக அரசின் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செல்போன் பயிற்சி
திட்டத்தின் சுருக்கம்:
கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலம் 3 மாத செல்போன் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ.300/- உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி/ தேர்ச்சியற்றவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனுடைய நபர்கள் பயிற்சியளிக்கப்படும் பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தன்னிச்சையாக செல்லுகின்ற திறன் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் 10 ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சியற்ற சான்றிதழ்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
FREE CELL PHONE SERVICE AND MAINTENANCE TRAINING COURSE
1. | Gist of the Scheme | The Orthopaedically Differently Abled persons are given training in Cell Phone Service and Maintenance. Three months training programme is given in all districts through Directorate of Technical Education, Chennai.. A stipend of Rs.300/- per month is given to the Trainees. |
2. | Eligibility Criteria | The Differently Abled persons who are able to move around and who have passed / Failed in X Std. |
3. | Whether form of application is prescribed. | Yes. Applications are available with concerned District Differently Abled Welfare Officer. |
4. | Certificates to be furnished | National Identity Card for Differently Abled and 10th pass/ Fail Certificate. |
5. | Officer to whom the application is to be submitted | District Differently Abled Welfare Officer. |
6. | Grievances if any to be addressed to | Principal Secretary / State Commissioner for the Differently Abled, State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road, K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 |