என்னைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெயர் ஹரிஸ் கோட்டின். ரிசர்வ் வாங்கியில் துணை மேலாளாராக பணிபுரிகிறேன். எனக்கு 13 வயது இருக்கும் போது தீ விபத்தில் எனது பார்வையை இழந்தேன். மருத்துவர்கள் அப்போது எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். நானும் காத்திருந்தேன் எனக்கு பார்வை கிடைக்கும் என்று. சிகிச்சைக்காக எனது படிப்பையும் இடையில் தொடர முடியாமால் போனது. இரண்டு வருடங்கள் கடந்து போயின ஆனாலும் எனது பார்வை திரும்ப கிடைக்க வில்லை. இந்த தருணத்தில் நான் சில் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். எனது பெற்றோர்களிடத்தில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்தேன். எனது பெற்றோர்களும் இதே சிந்தனையில் தான் இருந்தார்கள். நாங்கள் மருத்தவரிடம் சென்று ஆலோசனை கேட்டோம். அவர் வியாஸ் என்பவரை சந்திக்க சென்னார். நான் முதன் முதலில் சந்தித்த பார்வையற்றவர் அவர் தான். எனக்கு அப்போது தெரியாது அந்த சந்திப்பு எனது வாழ்கையை மாற்றிவிடும் என்று. அவர் வணிகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அன்று எனக்கு நம்பிக்கை பிறந்தது என்னாலும் முடியும் என்று. எனது முதல் நம்பிக்கையும் அதுதான். கடினமானலும் வெற்றி நல்லதுதானே. அவர் கூறிவாறு நான் சில பயிற்சிகளையும், மாறுவாழ்வு வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனது வாழ்கை இவ்வாறு ஒரு புதிய உலகத்தில் ஆரம்பித்தாது. அது இருளாக இருந்தாலும் எனக்க பழகிவிட்டது.
எனக்கு முதல் வேலை கிடைத்தாது. ரிசர்வ் வங்கியில் தொலைபேசி ஆப்ரேட்ராக பணிபுரிய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அது மிகப்பெரிய வேலையாக இருந்தது. அதன்மூலம் எனக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைத்தார்கள். இதுவும் எனக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தாது. Access India வை 2000 த்தில் சந்திக்க நேர்ந்தது. அப்போது சில பார்வையற்றவர்களையும் சந்திக்க நேர்ந்தது. 2000ம் ஆண்டு தற்போது போல பார்வையற்றவர்களுக்காக எந்த ஒரு சிறந்த மென்பொருளும் வரவில்லை. Screen reader, விண்டோஸ் இயக்குவது கூட கடினமாக இருந்தது. நாங்கள் மேலைநாடவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வுகளை தேட ஆரம்பித்தோம். இந்தியா மக்களுக்கு ஏற்றவாறும் அதே சமயம் பார்வையற்றவர்கள் உபயோகிக்கம் வண்ணம் நாங்கள் மென்பொருளை தயாரிக்க முடிவெடுத்தோம். உலகளவில் புதிய புதிய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கிறது. நாங்களும் அதற்கான மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறோம். கல்லூரி, பள்ளிகள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு ஏற்றார்போல் மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
நான் இறுதியாக உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்னவென்றால், எந்த வேலையாக இருந்தாலும் அது சிறிதாக இருக்கலாம் இல்லை பெரியதாக இருக்கலாம். அந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் எதற்கும் நிகர ஒப்பிட முடியாது.
சிறப்பாகவும் முனைப்புடனும் செயல்பட்டு நம்திறமையை வெளிப்படுத்துவோம்.
நன்றி: inclusive