தமிழக அரசின் திட்டம்-பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி
திட்டத்தின் சுருக்கம்
அ)பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபரை ஊக்குவிக்கும் பொருட்டு திருமண உதவித் தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில் ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச் செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 கிராம் தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
ஆ) பட்டம் மற்றும் பட்டயம் பயின்ற பெண்களுக்கு ரூ. 50,000/- மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.25,000/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் ரூ. 25,000/- திருமண செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
தம்பதியர் இருவரும் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், இருவரில் ஒருவர் பார்வை உள்ளவராகவும் மற்றொருவர் பார்வையற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, திருமணத்திற்கான அத்தாட்சி மற்றும் வயதுச் சான்றிதழ்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49 /
District Collectors.
MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING VISUALLY IMPAIRED