Muscular Dystrophy Artist Udhayakumar - enabled.in

Muscular Dystrophy Artist Udhayakumar

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான கைவினைப் பொருட்காட்சியில் திரு.உதயகுமாரை என்பவரை சந்தித்தேன். சிறந்த ஒவிய ஆற்றல் மிக்கர்.

Muscular Dystrophy Artist
Muscular Dystrophy Artist

ஒவியத்தில் பல புதிய முறைகளை செய்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதுவைரை 800 ஒவியங்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகியுள்ளன. இவர் 9க்கும் மேற்ப்பட்ட ஒவியக் கண்காட்சிகளை தனிப்பட்ட முறையில் நடத்தியுள்ளர். தசை வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர் (Muscular Dystrophy) இந்த சாதனைக்கு உரியவர் என்பது வியப்பிக்குரிய ஒன்றாகும். இவர் குழந்தையாக இருக்கும் போதே தசை வளர்ச்சி குறையத்தொடங்கியது இருந்தும் கடினப்பட்டு பத்தாம் வகுப்பு வரை படித்து நல்ல மதிப்பெண் பெற்றார். அதன் பிறது வண்ணத்தில் தனது திறமையை கண்டாறிந்து அதில் பல புதிய முறைகளை புகுத்தி சாதனை செய்துள்ளார். அவரது தாயார் கூறும்போது

எனது மகன் உதயகுமாருக்கு occupational therapy யில் வண்ணங்களை கீழே உற்றி சுவாச பயிற்சி கொடுக்கும் போது அவனக்கு அந்த வண்ணங்கள் மீது அதிக ஈடுபாடு ஏற்ப்பட்டது. அதிலிருந்து ஒவயங்களை தீட்ட ஆரம்பித்தார். ஒவிய ஆசியாரகாகவும் சில காலம் பணியாற்றினார். அவரது தசைகள் சிறியது சிறியதாக வழுவிழந்து கொண்டிருக்கிறது. இருந்தும் இன்னும் இவர் ஒவியத்தின் மீதுள்ள ஆர்வம் குறையவில்லை.  விரைவாக சேர்வடைந்தாலும் அவர் ஆரம்பிக்கும் பணியை முடிக்காமல் விடமாட்டார். எனது மகனுக்கு சிறந்த ஒவியர்களுக்கு மத்தியில் தனது ஒவயங்களும் இடம்பெற வேண்டும் என்ற உறிதியான நோக்கத்தில் தினமும் ஒவியத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.

திரு உதயகுமார் கூறும்போது,
நான் சென்னை ஒவிய சமார்ப்பித்தலில் (Chennai Art Submit ) எனது ஒவியங்களும் இடம் பெற வேண்டும் என்பது எனது இலட்சியம்.  எனது ஒவியத்திறனுக்கு இன்னும் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது எனக்கு சிறிய வருத்தம். இருந்தாலும் அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வேன் வெற்றி கிடைக்கும்.

இவரது ஒவியங்கள் மிகுந்த நுனுக்கங்களை கொண்டுள்ளது. இருந்து அவற்றிற்கு தகுந்த மதிப்பும் விலையும் இல்லை என்பது வருத்தத்க்குரியது.

Contact No : 9543111282, e-Mail : r_udaichinna@yahoo.co.in
நேர்காணல் சதாசிவம்

Leave a comment

Share Your Thoughts...