R.K. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள்
- மாற்றுத்திறனாளிகளுக்கு தடையின்றி வாக்களிக்க தேவையான சக்கர நாற்காலிகள்
- சக்கர நாற்காலியுடன் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிய உதியாளர்கள்
- மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலையில் வாக்களிக்க வசதிகளை ஒருங்கிணைக்க Nodal Officer நியமனம்
- மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய இணையதளம்
வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்
- வாக்குச்சாவடிகளில் வழிகாட்டும் அடையாள குறிகள்
- அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளங்கள்
- சக்கர நாற்காலியுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் வசதி
- பார்வை குறைபாடுள்ள வாக்காளர்கள் அறியும் வகையில் பிரெய்லி (Ballot Paper)
- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி
- வாக்குச் சாவடிகளில் தரை தளத்தில் வாக்களிக்க வசதி
- மாற்றுத்தினாளிகள் அதிக அளவில் குடியிருக்கும் பகுதிகளில் குறப்பாக பார்வையற்ற மற்றும் தொழுநோயால் பாதிக்கபட்ட மாற்றுத்திறனாளிக்கான தனி வாக்குச் சாவடி
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் பதிவுகளை சரிபார்த்திட சிறப்பு வசதி
- விடுபட்ட வாக்காளர் தங்கள் பதிவுகளை சரிபார்த்து இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதி
- வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் வசதி
- தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் விடுதியில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளை முன் கூட்டியே பதிவு செய்யும் வசதி (பதிவு செய்து கொள்ள EPIC No விவரங்களை 1950-க்கு அனுப்பும் வசதி)
பிற வசதிகள்
- மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பங்கேற்று வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு தகவல் கையேடு வெளியீடு
- பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி வழி கையேடு வெளியீடு
மேலும் தகவல் பெற 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்