மாற்றுத் திறனாளிகள் சட்டம், 1995ன் கீழ் புகார்களைப் பதிவு செய்தல்
திட்டத்தின் பெயர் /திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத் திறனாளிகள் புகார்களைப் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் குற்றங்களை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்று, அவைகளுக்கு காரணமான நபர்கள்/நிறுவனங்களை அழைத்து விசாரணை நடத்துவார். மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி சேர வேண்டிய பயன்கள், திட்டங்கள், உதவிகள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்
இல்லை
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
மாற்றுத் திறனாளிகளின் சலுகைகள் பறிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
REGISTRATION OF COMPLAINTS UNDER PERSONS WITH DISABILITIES ACT, 1995