தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்
திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அ) 10ம் வகுப்பு படிக்கும் மகள் = ரூ.1,000
ஆ) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன்/மகள் = ரூ.1,000
இ) 11ம் வகுப்பு படிக்கும் மகள் = ரூ.1,000
ஈ) 12ம் வகுப்பு படிக்கும்/தேர்ச்சி பெற்ற மகள் = ரூ.1,500 உ) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் = ரூ.1,500
ஊ) பட்டப் படிப்பு(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) = ரூ.1,500
எ) பட்டப் படிப்பு விடுதி வசதியுடன் (மகன்/மகள்) = ரூ.1,750
ஏ) பட்ட மேற்படிப்பு(மகன்/மகள்) = ரூ.2,000
ஐ) பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன்(மகன்/மகள்) = ரூ.3,000 ஒ) தொழிற் கல்வி பட்டப்படிப்பு = ரூ.2,000
ஓ) தொழிற் கல்வி படிப்பு விடுதி வசதியுடன்(மகன்/மகள்) = ரூ.4,000 ஒள) தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு(மகன்/மகள்) = ரூ.4,000
க) தொழிற்கல்வியல் பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன் (மகன்/மகள்) = ரூ.6,000
கா) ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் (மகன்/மகள்) = ரூ.1,000
கி) ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் விடுதி வசதியுடன் (மகன்/மகள்) = ரூ.1,200
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம்உள்ளதா?
ஆம்.சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409
SCHOLARSHIP TO SON AND DAUGHTER OF PERSONS WITH DISABILITIES