தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி திட்டம் ( Secondary Grade Teachers Training Institute for differently abled )
திட்டத்தின் சுருக்கம்:
பூவிருந்தவல்லி, பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம் (ஆசிரியர் கல்வி பட்டயம்) செயல்பட்டு வருகிறது. கை,கால் குறைபாடுடைய 50 பேர் ஆசிரியர் பயிற்சி பெறுவார்கள். இப்பயிற்சி பெங்களூரில் உள்ள மண்டல தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்பயிற்சியை பெறுவதன் மூலம் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
மேல்நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 40க்குள் இருத்தல் வேண்டும். ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்:
ஆம்.விண்ணப்பம் பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.125/-ம், இதர பிரிவினர் ரூ.250/-ம் வரைவுக் காசோலையாக செலுத்தி விண்ணப்பம் பெற வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
மேல்நிலை வகுப்பு மதிப்பெண் பட்டியல்,சாதிச் சான்றிதழ்,தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ் மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ்.
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்:
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
SECONDARY GRADE TEACHERS TRAINING INSTITUTE FOR THE ORTHOPAEDICALLY DIFFERENTLY ABLED PERSONS (DIPLOMA IN TEACHER EDUCATION)