Tamilnadu Chief Minister J Jayalalithaa today said differently-abled people in the State Transport Corporations would be given special casual leave with pay on 3 December, which was being observed as International Day for Disabled.
An official release here said such facility was being extended to the differently-abled people in government and government- aided institutions.
On coming to know that those in the State Transport Corporations were not covered, Jayalalithaa today announced the extending of the benefit to them also.
This is not the first time for the AIADMK government led by Jayalalithaa to come to the help of the differently-abled in the State.
Only recently, Jayalalithaa has ordered enhancing the monthly assistance from Rs 500 to Rs 1000 to over 76,000 differently abled persons in Tamilnadu.
The announcement was aimed at reaching out the beneficiaries covered under different schemes, including persons with severe disability and muscular dystropy
She also announced the inclusion of differently-abled persons in the free gold and marriage assistance scheme launched by as soon as assuming the power after winning the Assembly elections.
Under the scheme, which was one of the populist poll promises made by the AIADMK , the beneficiaries would get four gram of gold for making ‘Thaali’ (Thirumangalyam) and financial assistance of Rs 25,000.
An official press release here said the Chief Minister wanted the differently-abled to be included in the scheme to enable them to get the benefits. The release said the State government would incur an additional expenditure of Rs one crore in view of this.
Jayalalithaa also doubled the assistance given to women who had studied upto Under Graduate or Diploma from Rs 25,000 to Rs 50,000 and also announced free four gm gold coin for their marriage.
மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை! – ஜெ! போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்புச் சலுகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இது தொடர்பான அரசு வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில்தான் அதாவது 1992-93ல்தான் ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது.
அரசின் உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகளைச் சென்றடையும் வகையில் பல சிறப்பான திட்டங்களை இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படுமென்றும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு/ அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சலுகை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.