திட்டம் Archives - Page 2 of 2 - enabled.in
சுய வேலைவாய்ப்பு

சுய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன்பருவப் பள்ளி திட்டம்

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன்பருவப் பள்ளி திட்டம்

செவித்திறன் பாதிப்புடன்,பேச இயலாத சிறுவர்களுக்கு முன் பருவக் கல்வி, இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு வசதியுடன் வழங்கப்படுகிறது.

சிறப்புக் கல்வி திட்டம்

சிறப்புக் கல்வி திட்டம்

பார்வையற்றோர், காது கேளாதோர்,மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி, தொழில் கல்வி, மனவளர்ச்சி குன்றியோருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை இரண்டு இணைச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.