மாற்றுத்திறனாளி Archives - Page 5 of 5 - enabled.in
அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளியான இவருக்கு, பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலை. பெற்றோரும் செவித்திறன் குறைவுடையோர் ஆவர். கிராமப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வழக்கமான தொல்லைகள் இவருக்கும் இருந்தது.இதனால் இவரது பொழுதுகள் பெரும்பாலும் கிராமத்தை கடந்தே நகர்ந்து வந்தன. அருகில் உள்ள எழுதூர்பாட்டி கண்மாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிறைய கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. இதுவே சப்பாணியின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. இங்கு வரும் மயில்களை கண்டு ரசிப்பதும், விளையாடுவதுமாக பொழுதை கடத்தி வந்தார்.

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

மாற்றி யோசிக்கலாம்

மாற்றி யோசிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? சாதிப்பதற்கான வாசல்கள் அவர்களுக்குத் திறந்திருக்கின்றனவா? வாழ்க்கையை சாதிப்பதற் கான ஒரு களமாகக் காண்பவர்கள் வெகு சிலரே. ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்த நம்மில் பலருமே படித்து ஒரு வேலையில் சென்று அமர்வதற்குள் காற்றுப்போன பலூனாக மாறிவிடுகிறோம். இந்த நிலையில் ஏதோ ஒரு திறன் குறைவுடன் பிறக்கும் மாற்றுத் திறனாளிகள், அந்தக் குறையையும் மீறி வாழ்க்கையில் வெற்றிகாண்பது என்பது ஒரு சவால்தான். ஆனாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு வெற்றிகண்டவர்கள் பலர்.

சாமுவேல் – மாற்றுத்திறனாளி உதாரண மாணவன்!

சாமுவேல் – மாற்றுத்திறனாளி உதாரண மாணவன்!

பட்டினி கிடந்து பெற்றோரை பணிய வைத்த மாற்றுத்திறனாளி சாமுவேல். ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் ஜெபஞான ஜெயராஜ். பனை மர ஓலைகள் வெட்டி கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தகவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மிகச்சிறந்த பயிற்சி ஆகும். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் கலந்து கொள்வது மூலம் உலகாளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு ஏற்படும்.

இரா.சும‌தி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்

இரா.சும‌தி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்

திறமைகளை சமூகத்தில் புகுத்தும் திறமை உடையவள் இவள் – சிறுவ‌ய‌திலிருந்தே நாட்குறிப்பு எழுதிய‌ அனுப‌வ‌முடைய‌வ‌ராக‌ இருந்த‌தால் த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ந‌வீன‌ வார்த்தைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ருக்கு தான் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வுக‌ளை காலத்தின் ப‌திவுக‌ளாய் க‌விதையாய் உருவாக்குவ‌து எளிதான‌து.

Aruna Devi is the first women to get MSW in South India

Aruna Devi is the first women to get MSW in South India

தன் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தன்னை சிறுமைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் செல்வி அருணாதேவியை சந்தித்தபோது மிகவும் பிரம்பமித்து போனேன். அருணாதேவி விருதுநகரை சேர்ந்தவர். அனைவரையும்போல பள்ளிப்பருவத்தில் பல கனவுகளுடன் சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்தவருக்கு 11ம் வகுப்பில் மிகவும் கடினமாக சோதனை ஏற்ப்பட்டது. உலகை கண்டு பயப்படமால் துள்ளித்திரிந்தவருக்கு இனி உலகை காண முடியது என்று அப்போதுதான் தெரிந்தது, ஆம் அவருக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தது. துங்கும் போது மட்டும் இரவைக்கண்ட அவர் இனி காலம் முழுவதும் […]

A Living inspiration differently abled Mr. Ilango

A Living inspiration differently abled Mr. Ilango

சென்னை” இன்று தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறது. வேகமான வாழ்க்கை, உறவுகள் அற்று தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் இச்சென்னையில் தன்வாழ்க்கையில் பகலையும் இரவையும் ஏன் இச்சென்னை இவ்வாறாக இருக்கிறது என்றுகூட அறிய முடியாத நிலையில் இச்சென்னை மக்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி பெற முடியும் என்று பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார் திரு.இளங்கோ.

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பேரணியாகச் செல்லும் மாற்றுத் திறனாளிகள்

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பேரணியாகச் செல்லும் மாற்றுத் திறனாளிகள்

கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஜூன் 16-ம் தேதி பேரணியாக செல்லவுள்ளனர்.

உங்கள் நன்மைக்காக ஊனமுற்றோர் என்கின்றோம், மன்னியுங்கள்! – கலைஞர் உருக்கம்

உங்கள் நன்மைக்காக ஊனமுற்றோர் என்கின்றோம், மன்னியுங்கள்! – கலைஞர் உருக்கம்

தமிழ ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட’ நன்றி பாராட்டும் விழாவில்’ கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,  கல்விச் சேவையில்,  இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார். சமூகநலத்துறை அமைச்சர்  திருமதி: கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் கலைஞர், இங்கே  நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் எடுத்துக்காட்டியதைப் போல்  […]