
சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!
சக்கர நாற்காலியில் சுழன்றபடி அந்த வளைக்கரம் அனாயசமாக வாளை வீச, பார்க்கும் நமக்கோ பிரமிப்பு. வாளின் வேகம் காற்றைக் கிழித்து கொண்டு பாய்ந்தது. வளைக்கரம் வாள் வீசுவது புதிதா என்ன? இல்லை. ஆனால் இந்த வளைக்கரத்துக்குச் சொந்தமான இந்திரா- மாற்றுத் திறனாளி என்பதுதான் புதிது. இவர் தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.