
கோவை ஞானி – மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்
கோவை ஞானியின் இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.