
சலுகைக் கடன் திட்டம்
இளம் மாற்றுத்திறனாளிகள் தொழில்முறையினருக்கு அதாவது தங்களது சொந்தத் தொழில் துவக்குவதற்கு தேசீய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (www.nhfdc.nic.in)த்தின் மூலம் சலுகைக் கடன் திட்டம்
இளம் மாற்றுத்திறனாளிகள் தொழில்முறையினருக்கு அதாவது தங்களது சொந்தத் தொழில் துவக்குவதற்கு தேசீய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (www.nhfdc.nic.in)த்தின் மூலம் சலுகைக் கடன் திட்டம்
நவீன வகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து சான்று பெற்று, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளர்.
தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிறந்தது முதல் வளர் பருவகுழந்தை வரை உள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பநிலை பாதிப்பைக் கண்டறிந்து அக்குழந்தைகள் 5வது வயது அடைவதற்குள் அவர்களுக்கு மொழி மற்றும் பேச்சு பயிற்சி வழங்கி அவர்களை சாதாரண பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்/பணிபுரிவோர்/சுயதொழில் புரிவோருக்கு (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள)மோட்டார் பொருத்திய பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்கப்படுகின்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.