கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
கை, கால் பாதித்த மாற்று திறனாளிகளுக்கு பாலிடெக்னிக் மூலம் 3 மாத மொபைல் போன் சரி பார்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் சேர விரும்புவோருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு இருக்க வேண்டும்.
கை, கால் பாதித்த மாற்று திறனாளிகளுக்கு பாலிடெக்னிக் மூலம் 3 மாத மொபைல் போன் சரி பார்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் சேர விரும்புவோருக்கு 40 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு இருக்க வேண்டும்.
தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.
பார்வையற்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசு, 2010 – 2011ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்-க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்-க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
பார்வையற்றோர், காது கேளாதோர்,மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி, தொழில் கல்வி, மனவளர்ச்சி குன்றியோருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை இரண்டு இணைச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.