மாற்றுத்திறனாளி Archives - Page 4 of 5 - enabled.in
சுய வேலைவாய்ப்பு

சுய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

2011ஆம் ஆண்டிற் கான இவ்விருதை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த முறையில் தொண் டாற்றிவரும் சென்னை திருவான்மியூர் ப்ரீடம் அறக்கட்டளைக்கு வழங்க தேர்வு செய் யப்பட்டுள்ளது. வரும் செப்.6ஆம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடை பெறும் குமாரராஜா மு.அ.முத்தையா செட்டி யாரின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் இவ்விருதும் பரிசும் வழங்கி சிறப்பிக்க இருக் கிறோம்.

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர்.

கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்

முட்டிக்கு கீழ் கைகளையும், முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், செயற்கை கருவிகளை பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: முட்டிக்கு கீழ் கைகளை இழந்த மற்றும் முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன வகை செயற்கை அவயங்கள், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகங்கள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நவீன செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பள்ளி அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற சான்று ஆகியவற்றுடன், அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு உடனே நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழன்றபடி அந்த வளைக்கரம் அனாயசமாக வாளை வீச, பார்க்கும் நமக்கோ பிரமிப்பு. வாளின் வேகம் காற்றைக் கிழித்து கொண்டு பாய்ந்தது. வளைக்கரம் வாள் வீசுவது புதிதா என்ன? இல்லை. ஆனால் இந்த வளைக்கரத்துக்குச் சொந்தமான இந்திரா- மாற்றுத் திறனாளி என்பதுதான் புதிது. இவர் தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்’ என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும்.

‘தில்’லானா தைரியாம்பாள் !

‘தில்’லானா தைரியாம்பாள் !

சுடிக்ஷ்னா வீரவள்ளியின் நாட்டியத்தைப் பார்த்து! இவரின் நாட்டியத்தை சிறப்பாக ரசிக்க வைக்கும் காரணங்கள் மூன்று. அவரது அர்ப்பணிப்பான நடனம்; சிகாகோவில் வாழும் இந்தியரான இவர், சர்வதேச அளவில் பல மேடைகள் கண்டிருந்தாலும்… இந்த பாரம்பரிய வேரைத் தேடி சென்னைக்கு ஓடி வந்திருக்கும் அவரின் ஆர்வம்; மூன்றாவதாக… சுடிக்ஷ்னா, ஒரு மாற்றுத்திறனாளி!

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

மாற்றுத்திறனாளி ஆசிரியரை மலைக்கிராம பள்ளியில் பணி நியமனம் செய்ததால், அவர் தினமும் 128 கி.மீ., தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்தும், எட்டு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்தும் பள்ளி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார்.