அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளியான இவருக்கு, பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலை. பெற்றோரும் செவித்திறன் குறைவுடையோர் ஆவர். கிராமப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வழக்கமான தொல்லைகள் இவருக்கும் இருந்தது.இதனால் இவரது பொழுதுகள் பெரும்பாலும் கிராமத்தை கடந்தே நகர்ந்து வந்தன. அருகில் உள்ள எழுதூர்பாட்டி கண்மாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிறைய கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. இதுவே சப்பாணியின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. இங்கு வரும் மயில்களை கண்டு ரசிப்பதும், விளையாடுவதுமாக பொழுதை கடத்தி வந்தார்.