மாற்று திறனாளிகள் Archives - enabled.in
ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள்

ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள்

உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவுதல் ஏழ்மை நிலையிலிருக்கும் ஊனமுற்றோருக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நீடித்து உழைக்கக்கூடிய எளிமையான நவீனமான, தரமான உபகரணங்கள் வாங்க உதவுவதன் மூலம் ஊனமுற்றவர்களின், உடல் நிலையையும், மனநிலையையும் சமுதாய நிலையையும், இத்திட்டம் உயர்த்துகிறது. மேலும் அவர்களுடைய ஊனத்தினால் ஏற்படும் துன்பத்தைக் குறைத்து பொருளாதார ரீதியிலும் மேம்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தரப்படும் உபகரணங்கள் யாவும் இந்திய தரச்சான்று (ISI) பெற்றிருத்தல் அவசியம். உடல் […]

ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’!

ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’!

சென்னை: ஊனமுற்றோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களின் ஆவணங்களில் இனி ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதில் மாற்றுத் திறனாளிகள் என மாற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், […]