Assistance Archives - Page 2 of 2 - enabled.in
செயல்முறைத் திட்டம் 2011-2012

செயல்முறைத் திட்டம் 2011-2012

பொருளாதார நிலையில் தனித்து நிற்கும் நிலையை அடையச் செய்ய சிறப்புக் கல்வி அளித்தல், வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அளித்தல், பணியில் அமர்த்துதல், சுய வேலை வாய்ப்புக்கு உதவி அளித்தல், உதவி உபகரணங்களை இலவசமாக வழங்குதல் ஆகியவை அடங்கிய விரிவான நலம் அளிப்பதே இத்துறையின் முக்கிய நோக்கமாகும்

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளர்.

பார்வையற்றோர் பயிற்சி மையம்

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.

வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

தமிழக அரசின் புதிய சலுகைகள்

தமிழக அரசின் புதிய சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

Assitive & Adaptive Technology for Spinal Cord Injury

Assitive & Adaptive Technology for Spinal Cord Injury

The premier source for information on Assistive Technology. ABLEDATA is a federally funded database whose primary mission is to provide information on assistive technology and Rehabilitation equipment available from domestic and international sources. The database contains information on more than 29,000 assistive technology products with detailed descriptions of each product including price and company information.

Indian Central Government Assistance

Indian Central Government Assistance

For those who want to set up small businesses, an amount INR 500 to INR 1000 given as seed money to buy the equipment or the items needed to set up shop.