தமிழக அரசின் புதிய சலுகைகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்