Tamil Nadu Archives - Page 33 of 42 - enabled.in
வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

Supply of free Braille Books for Visually impaired students

Supply of free Braille Books for Visually impaired students

பார்வையற்றோருக்கான அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் அச்சடித்த புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்

சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற 220 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் மடிக் கணினியுடன் சிறப்பு சாப்ட்வேருடன் லேப்டாப்பேசும் சாப்ட்வேர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

‌திருமண ‌நி‌தியுத‌வி வழங்கினர் ஜெயல‌லிதா

‌திருமண ‌நி‌தியுத‌வி வழங்கினர் ஜெயல‌லிதா

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தம்பதியினருக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொட‌ங்‌கி வைத்தார்.

மாணவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு

மாணவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு

பார்வையற்றவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு, 2010 – 2011ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்-க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்-க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

Agape Rehabilitation Center

Agape Rehabilitation Center

The Agape Rehabilitation Center in Chennai works to give them the skills to hopefully find a job.”Our students have special needs so a regular computer center might not patient or modified to suit their needs, so this special center is very essential,” said Agape Coordinator Avitha Daniel.

தமிழக அரசின் புதிய சலுகைகள்

தமிழக அரசின் புதிய சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும் . மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டும். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படும்.