சாதனைகள் என்று உலகில் எதுவும் இல்லை, முயற்சிகள் இருக்கும் வரை. பிரபா என்பவர் இதை நிருபித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த இவர் பல முயற்ச்சிகளை இன்று வரை தெடர்ந்து செய்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி (Multiple disability). இவர் சிறிய வயது முதல் இவரது எலும்புகள் மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. அதாவது இவரது எலும்புகள் எளிதில் உடைந்து விடும். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் 10ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து படித்து தேர்ச்சி பெற்றார். இவர் என்ற DCA கணினி படிப்பையும் முடித்துள்ளார், தனக்குள் இருக்கும் ஒவிய ஆற்றலை (glass painting) விரைவாக கண்டுக்கொண்டார். ஒவியத்தில் கண்ணாடி ஒவியத்தில் ஏழு வருடம் அனுபவம் உள்ள இவர் 20க்கும் மேற்ப்பட்ட ஒவியக் கண்காட்சியில் இடம் பெற்றள்ளார் என்பது வியப்புக்குரியது. இதுவரை மூன்றிக்கம் மேற்ப்பட்ட விருதுகளை பெற்றுள்ள இவர் தமிழக ஆளுனரிடம் சாதனை பெண் என்ற விருதை பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு முன் உதரனமாக இருக்கும் இவர் ஆபரண வடிவமைப்பளராகவும் தனது திறமையை வெளிப்படுத்துகின்றார்.
இவர் தன்னைப்பற்றி குறிப்பிடும்போது,
எனக்கு சிறிய வயது முதல் ஊனத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது எழும்புகள் மிகவும் வழுவிழந்து கணப்படும், மற்றவர்கள் எனது எழும்புகளை பிடித்தால் கூட உடைந்துவிடும். எண்ணற்ற அருவை சிகிச்சை செய்து தற்போது நன்றாக உள்ளது என்று எண்ணுகிறேன். எனது ஒவியங்களை கண்காட்சியில் மட்டுமே விற்கமுடியும். எனக்கு தொடர்ந்து விற்பனை செய்ய இன்றுவரை வாய்ப்புகள் இல்லை இதை தொண்டு நிறுவனங்களும் மற்றும் அரசாங்கமும் தான் எனக்கு செய்து கொடுக்க முடியும். எனக்கு பண உதவி செய்ய வேண்டாம் எனது உழைப்புக்கும் எனது முயற்ச்சிக்கும் அதரவு கொடுத்தால் போதும் அதன்மூலம் நான் மேலும் என்னை உயர்த்திக்கொள்ள முடியும் என்றார். மேலும் நான் தற்போது கூட எனது காலில் அறுவை சிகிச்சை செய்தேன் ஆனாலும் எனது முயற்ச்சியில் சிறிதும் தளராமல் இன்னும் செய்து கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் திறமை இருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை அதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமான திறமைகள் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாத ஒன்று.
திறமைகள் என்பது முயற்ச்சிகள் இருக்கும் வரை தான்.
இவரை தொடர்ப்பு கொள்ள : 9940240719
நேர்காணல்: சதாசிவம்