Schemes for Persons with Disabilities
கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

Government Institute for the Mentally Challenged

Government Institute for the Mentally Challenged

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் அன்றாட செயல் திறன்களை கவனித்துக் கொள்ளத் தேவைப்படும் சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியினை இலவசமாக அளிப்பதுடன் இலவச தங்கும் விடுதி, உணவு,மற்றும் சீருடைகள் அளிக்கப்படுகின்றன.

Cash prize and assistance for visually impaired students

Cash prize and assistance for visually impaired students

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கீழ்கண்டவாறு சிறப்பு விருது வழங்குதல். இது தவிர தமிழ் நாட்டிற்குள் இவர்களது உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்.

சுய வேலைவாய்ப்பு

சுய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.