தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச உபகரணங்கள்
மூன்று சக்கர சைக்கிள்கள்
திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத்திறனாளிகள் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு சுலபமாக சென்றுவர மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாகவும், 12 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
ASSISTIVE DEVICES FOR DIFFERENTLY ABLED PERSONS TRICYCLES