V-ABLE 2022 - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாதன் பட்டதாரி உதவித்தொகை - enabled.in

வித்யாதன் “V-ABLE” – 2022 கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

v-able 2022 - Scholarships for Differently abled student

வித்யாதான் மற்றும் LTI இணைந்து “V-ABLE – 2022” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாதன் பட்டதாரி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் பட்டப்படிப்புக்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்பு முயற்சியாகும். கல்வி உதவித்தொகை 3 முதல் 4 ஆண்டுகள் வரை பாடநெறியின் காலம் மற்றும் படிப்பில் மாணவர்களின் செயல்திறனைப் பொறுத்தது.

கல்வி உதவித்தொகையின் அளவு:

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பட்டப் படிப்புகளைத் தொடர ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.60,000 வரை உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள். மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பு திறன் பயிற்சியையும் பெறுவார்கள்.

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:

இந்த ஆண்டு (2022) பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூபாய் 4 லட்சத்துக்கும் குறைவான பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஊனத்தின் சதவீதம் 40% க்கு மேல் உள்ள மாணவர்களுக்கான உதவித்தொகை. மாணவர்கள் தங்கள் 12வது தேர்வில் 60% அல்லது 6 CGPA க்கு மேல் தேர்ச்சி பெற்று 2022 இல் பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க
வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

மாணவர்களின் விண்ணப்பங்கள் மதிபெண்கள் மற்றும் கொடுக்கபட்ட விவரங்களின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திறனாய்வு தேர்வு குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு Online / Offline மூலம் அழைக்கப்படுவார்கள் மாணவர்களின் விவரம் மற்றும் நேர்முகத்தேர்வின் அறிவிப்புகள் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள்:

அக்டோபர் 30, 2022: விண்ணப்பிக்க கடைசி தேதி.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய அறிவுருத்தப்படும் (தேதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்). தேர்வு குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வுகள் Online மூலம் ஆரம்பமாகும் (தேதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்)

Apply Now

தேவையான ஆவணங்கள்:

கீழ்க்காணும் நகல் எடுக்கப்ட்ட ஆவணங்களின் விவரங்கள்:

  • 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • மாணவரின் புகைப்படம்
  • மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்
  • போட்டித் தகுதித் தேர்வின் மதிப்பெண் பட்டியல் (NEET, JEE, முதலியன)

தொடர்புக்கு:

எவ்வித விவரங்களுக்கு vable@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். அல்லது +91 7339659929 (ஜேக்கப் சுகுமார்) என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இல்லையென்றால் www.gmail.com அல்லது வேறு மின்னஞ்சல் வழங்கும் இணையதளத்தில் ஒரு கணக்கை திறக்கவும்.
  2. எதிர்கால பயன்பாட்டிற்காக மின்னஞ்சல் முகவரி மட்டும் கடவுச்சொல்லை நினைவில் கொள்ள வேண்டும்.
  3. வித்யாதன் இணையதளத்தில் https://www.vidyadhan.org/register/student புதிய கணக்கை உருவாக்கும் போது கீழ்க்காணும் விவரங்ககளை மறவாமல் பின்பற்றவும்.
    • First Name: கல்வி சான்றிதழில் உள்ளபடி முதல் பெயரை பதிவு செய்யவும்.
    • Last Name: கல்வி சான்றிதழில் உள்ளபடி கடைசி பெயரை பதிவு செய்யவும்.
    • EmailID: உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். மின்னஞ்சல் முகவரியை நினைவில் கொள்க எதிர்கால பயன்பாட்டிற்காக தயவுசெய்து Internet cafe/நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்.
    • Vidyadhan Password: மேற்குறிப்பிட்ட கணக்கிற்கு குறைந்தபட்சமாக 8 இலக்கங்களில் கடவுச்சொல்லை உருவாக்கவும். கடவுச்சொல்லை மறந்து விட வேண்டாம்.
  4. “Apply Now” பொத்தானை அழுத்தவும். அழுத்தியவுடன் கணக்கை செயல்படுத்தும் இணைப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
  5. மின்னஞ்சலை திறந்து உங்கள் கணக்கை செயல்படுத்தும் மின்னஞ்சல் கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் “Account is activated” செய்தியுடன் வித்யாதன் என்ற இணையதளத்திற்கு செல்லும்.
  6. இப்பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் வித்யாதன் கடவுச்சொல்லை கொண்டு உங்களது கணக்கை துவக்கவும்.
  7. கணக்கை தொடங்கிய பிறகு “Help” என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கும் முறை மற்றும் நடைமுறையில் உள்ள உதவித்தொகைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளாலம்.
  8. இப்பொழுது “Apply Now” என்ற லிங்கை கிளிக் செய்து நடைமுறையில் உள்ள வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
  9. விண்ணப்பங்களை நிரப்பிய பிறகு அதை திருத்தம் செய்யலாம்.
  10. தயவுசெய்து உங்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும். ஏனென்றால் அனைத்து வித்யாதன் செய்திகள் மற்றும் உரையாடல்கள்
  11. உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும்.

வித்யாதன் பற்றி:

வித்யாதன் என்பது சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையால் வழங்கப்படும் ஒரு இந்திய உயர்கல்வி உதவித்தொகையாகும். இது திருமதி குமாரி ஷிபுலால் மற்றும் திரு. எஸ் டி ஷிபுலால் (இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி) ஆகியோரால் நிறுவப்பட்டது. வித்யாதன் 1999 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 26000 க்கும் மேற்பட்ட உதவித்தொகைகளை விநியோகித்துள்ளது. வித்யாதன் 12 மாநிலங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது.

v-able 2022 - Scholarships for Differently abled student

Leave a comment

Share Your Thoughts...